தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
category_top

நவீன இலக்கிய இரவு- 22 நவம்பர் 2021

நவீன இலக்கிய இரவு- 22  நவம்பர் 2021
*******************************************
 
தொகுப்பாளர்:
திருமதி. லதா குமார் அவர்கள்.

* திரு. ஆனந்தகுமார்  திருக்குறள் மற்றும் ரிஸ்கா முக்தார் அவர்களின் கவிதைகளைப் பகிர்ந்தார்.அவரின் எதார்த்தமான கவிதை அனைவருக்கும் பிடித்தது.

* திருமதி. மேனகப்புன்னகை அவர்கள்  லா.சா.ரா. அவர்களின் "பாற்கடல்"
சிறுகதையை பகர்ந்தார். அதனைத்தொடர்ந்து சேதுராமன் ஐயா அக்கதையை மிகவும் ரசித்து கருத்துக்கள் பகிர்ந்தார். 

* திருமதி. லதா அவர்கள் எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் அவர்களைப் பற்றியும், அவர் எழுதிய "திருவரங்கன் உலா" என்கிற சரித்திர நாவலை சுருக்கமாகப் பகிர்ந்தார்.

* திரு.சுரேஷ் அவர்கள் அவரே எழுதிய Thanks giving பற்றிய ஒர் ஆங்கிலக் கவிதையைப் பகிர்ந்தார். நன்றியுணர்தலை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியது.

இறுதியாகத் 
* திருமதி. தீபா அவர்கள்  கவிக்கோ. அப்துல் ரகுமான் அவர்களின் பாடல் ஒன்றை பகிர்ந்தார். 

அதனைத் தொடர்ந்து கருத்துரையாடல்களுடன் சிறப்பானதொரு நவீன இலக்கிய இரவாக இன்று இனிதே நிறைவடைந்தது.


(link)
category_top

நவீன இலக்கிய இரவு - 21 ஜூலை 2020

நவீன இலக்கிய இரவு - 21 ஜூலை 2020

(link)
category_top

செந்தில்குமார் பழனிசாமி கவிதைகள்

உயிர் இழுக்கும் போட்டி

புயல்  மழையா... கடும் வெயிலா ...
வானிலை எதுவும் தெரிவதில்லை 
தொலை தூரத்தில்  நிழலாய் 
உருவம் ஒன்று அசைவது  மட்டுமே
இருபத்து நான்குமணி நேரம்
ஒளிபரப்பாகுது  கண்களில்...
கொட்டி வைத்த உணர்ச்சிக் குவியல்கள்
சுரண்டிச் சுரண்டி மொத்தமாய் 
தீர்ந்து போனது
தோலில் சுருக்கமுண்டு சொரணை
என்பது கொஞ்சமும் இல்லை...
ஓடோடிச் சென்று பார்த்த உறவுகள்
காலமெல்லாம் கூட வந்த நட்புகள்
எங்கோ மூளையில் ஒளிந்து கொண்டு
கண்டுபிடிக்கச் சொல்லி  நித்தம்
நினைவுகளோடு விளையாடுகிறார்கள்...
எங்கும் நகராமல் இமை இறுக்க
மூடிக் கொண்டு உடம்பைக் கடத்தி 
இடுகாட்டில் உறங்கும் பயிற்சி தொடங்கியது
சில காலமாய் கட்டிலிலிருந்தே...
எவ்வளவு சொத்து எவ்வளவு தொகை
என்பது முக்கியமில்லை இப்போது ...
உயிர் இழுக்கும் போட்டியில்
இன்னும் எத்தனை நொடிகள் தாங்கிப்
பிடிப்பது காலனிடம் என்பதே…

வெற்றிடம் நிரம்பும்

அவசரம் கருதி அன்றிரவு எல்லாம்
கண்விழித்து முடித்துக் கொடுத்த
தருணத்தை நினைக்காதீர்...
உன்னைவிட்டால் ஆளில்லை என்று
பலமுறை உச்சத்தில் தூக்கி வைத்த
பெருமையைத் தேடாதீர்...
இத்தனை வருடங்கள் தூணென
இருந்தும் துரும்பென ஊதித்
தள்ளியதில் வருந்தாதீர்...
எங்கே தவறவிட்டேன் என்று
உங்களையே துளைத்துக் கொண்டு
கேள்விகளை எழுப்பாதீர்...
எங்கேனும் அமையும் வெற்றிடம்
அதனுள் உங்களை இட்டு நிரப்பும்
நம்பிக்கை விடாதீர்…

என் இனிய பயணம்

பரந்த உலகத்தில்
எனக்காய் ஒரு வனமுண்டு
அவ்வனத்தில் எனக்காய் ஒரு கொடியுமுண்டு
அக்கொடியிலே எனக்காய்
பூவொன்று பூப்பதுண்டு
அப்பூவிலே எனக்காய் மணமுண்டு
அம்மணத்தை நுகர்ந்துவிட்டால்
எனக்கு செழித்த வாழ்வுண்டு
அவ்வனத்தை அடைந்துவிடும்
பயணத்தை இதோ இனிதே
தொடங்கிவிட்டேன் முகவரிப் பற்றிய 
குறிப்பை மட்டும் தொலைத்துவிட்டு...
Large post

வாஞ்சி கவிதைகள்

கீழடி மேன்மை பாடுவோம்

 

மூவாயிரம் ஆண்டுக்கு முந்தியகுடியில்

பெண்மையைப் போற்றிடும் தமிழ்க்குடியில்

புள்ளிமானே கல்விமானாய் துள்ளித்திரிந்த

வள்ளிக்குறத்தியின் மெல்லினக்காதல்

 

நீள்சதுரமாய் செங்கலடுக்கி

ஆள்உயரமாய் சுவரெடுத்து

கால்பதித்திடக் கல்த்தரையும்

கோலோச்சிட நான்மாடமும்

 

அரியணைக்கு அரண்மனையும்

பஞ்சணைக்கு அந்தப்புரமும்

மழைநீர் படிந்திட வட்டக்கால்வாயும்

கழிவுநீர் வடிந்திட மூடியவாய்காலும்

 

கரைபுரண்டோடும் வைகையில்

திரைகடந்துவந்து வணிகம்செய்து

மேலைநாட்டு நாணயமும்

வேலைப்பாடுடை பொன்னும்மணியும் பரிசளிக்க

 

சாதிமத பேதமின்றி

மேதினியாளும் ஆதனை

மாலைசூடி மணந்திடவே

ஓலையனுப்பினாள் மண்பானை ஓட்டில்

 

உற்றாரும் ஊராரும்

பெற்றோரும் பெருமக்களும்

வரிசையோடு பரிசம்போட விரைந்திட

உதிரனும் திசனும் கொம்பூதி வரவேற்க

 

ஈழம் தாண்டிவந்து

ஞாலம் அழிக்கவந்த ஆழிப்பேரலை

தமிழகத்தை தனக்குள்ளே விழுங்கிட

தமிழினமே சமாதியானது தமிழியோடு

 

தொல்பொருள் கண்டெடுத்தக் கல்லோவியமே

தொல்காப்பியம் ஈன்றெடுத்தத் தமிழ்க்கீழடி

அழிந்துபோன வரலாற்றின் நாகரீகச்சின்னமே

அழியாதகாதலின் சரித்திரக்காவியம்...!!!

 




இருட்டில் ஏது நிழல்

 

மதமும் சாதியும்

சடங்குச் சன்னலைச் சாத்திவிட

கதவில்லா வாசலொன்று

மூடிக்கிடக்கிறது

முறிந்துபோன உறவுகளின்

முன் நெற்றி ரேகைகள் முடிச்சாய்

பின்னிக் கிடக்கிறது 

 

வாசம் செய்தவர்

வனதேசம் போய்விட

விட்டுச்சென்ற மூச்சுக்காற்று 

திரைச்சீலையில் ஊஞ்சலாடி

திரும்ப வராத தினங்களை

தீர்த்து வைக்க முயன்று தோற்கிறது

 

அக்னியின் சாட்சியாக 

அடியெடுத்து வைத்தவர்

குத்துவிளக்கு ஏற்றிட

சுவர்களில் படிந்த வெளிச்சம் 

படியாத ஒட்டடையாய்

குடியேறிய நினைவுகளைச்

சுமந்து நிற்கிறது

 

கொஞ்சிச் சிரித்து

நெஞ்சில் சுமந்து

கட்டில் கால்கள் வரைந்த

காலடி ஓவியங்கள்

கீழடியில் கண்டெடுத்த

கல்வெட்டாய் கண்முன் விரிகிறது 

 

கூடி வாழ்ந்து ஓடித் திரிந்த

கால்தடங்கள் வீடெங்கும்

அழியாத கோலங்களாய்

அழுக்கின் அடியில் படிந்து கிடக்கிறது 

 

புதர்மண்டிக் கிடக்கிறது 

புனிதமாய் பூசித்த

பூஜையறையும் தூசுபடிந்து

பதித்துச்சென்ற தடங்கள் வடுக்களாகி

ஆறிப்போன காயத்திலும்

ஆறாத வலியினை அமைதியாய்ச் சுமக்கிறது

 

வெறிநாய்களும் ஓநாய்களும்

வேலி தாண்டி வேதனை கூட்ட

இருப்பைத் துறந்து

இடிந்து விழ நினைக்க

மடிந்து மாயாதே

துணிந்து நில்

இனி வசப்படும் பார்..

அதட்டி அடக்கியது ஆழ்மனம்

 

இல்லையென அறிந்தும் 

இருட்டில் நிழல்தேடி அலைகிறது

இற்றுப்போன இதயம்

 

அகல்விளக்கு ஏற்ற

அக்னிச் சந்தையில் காத்திருக்கிறது 

ஆளின்றி அடக்கமாகிப் போன

இல்லமொன்று..!!!!

 


 

அன்பும் மனிதமும்

 

நியூயார்க் நகரம்..

 

மேக கூட்டமும் திணறும்

வான்வழியை மறைத்து நிற்கும்

இதன் கட்டிடங்களின் முனைகண்டு

உலகின் உச்சத்தில் அமர்ந்து 

அழகை ரசிக்க வரும் மக்கள் ஒருபுறம் 

கற்ற அறிவை விற்றுப் பிழைக்க வரும்

சான்றோர் கூட்டம் மறுபுறம் 

 

உலகின் உயிர்மூச்சைப் பிடித்து

சுவாசச் சங்கிலியில் பிணைத்து

அடுக்குமாடிப் பெட்டிக்குள்

அடைத்துவைத்த அற்புதமது

 

சிறகின்றி பறந்துவந்தச் சீன

சிறுகிருமியொன்று நுழைந்து

நகரத்தை நரகமாக்கிவிட்டு

நகர்ந்து போனது அடுத்த நகரம் தேடி

செல்வமும் செழிப்பும் உள்ளவர்

சொல்லாமல் செல்லுக்குள் ஒளிந்துகொள்ள

செல்லவழியில்லாதவர் செத்துப்

பிணங்களாய் குவிந்து போக

அடைத்து வைக்கவோ பெட்டியில்லாமல்

அடக்கம் செய்யவோ இடமில்லாமல்

சடலங்களே சவக்கிடங்கு வாசலில்

சமாதியாக வரிசையில் கிடந்த அவலமும்

அமைதியாக அரங்கேறியது அங்கே

 

கருப்புப்பையில் அடைத்து

சரக்கு வாகனத்தில் குவித்து

சாலையோரத்தில் நிறுத்திவிட்டு 

காணாமல் போயினர் வாகனமோட்டிகள்

உறவுகளும் உடைமைகளும் இருந்தும்

சாலையோரத்தில் அனாதைப் பிணமாய்

அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிட

அருகிலுள்ளோர் அச்சத்தில் உறைந்து

சவக்கிடங்கு ஊழியரிடம் முறையிட

மனிதநேயம் கொண்ட அவன்

தொற்றுமெனத் தெரிந்தும்

பிணக்குவியலை பற்றியிழுக்க

சுழன்று விழுந்தது சடலமொன்று

சுற்றியிருந்த பைகிழிந்து

 

குப்புறக்கிடந்த பெண்பிணத்தை

கைகளால் திருப்பிட

பெற்றவள் முகம்கண்டான்

மூர்ச்சையாகி விழுந்தான்

அன்பு கலந்த மனிதம் அங்கே அழுதிட..!!!

 



READ MORE
category_top

சங்க இலக்கிய இரவு: 16 மே 2022.


சங்க இலக்கிய இரவு: 16 மே 2022.

1057 குறளை அறிவியலுடனும், தனது சொந்த அனுபவத்துடனும் சேர்த்து மிக நேர்த்தியாக விளக்கம் அளித்தார், திரு. செங்குட்டுவன்.

புறநானூறு பாடல் 327 வை திருமதி. லதா வெகு சுவையுடன் பகிர்ந்தார். அதனை ஒட்டிய கலந்துரையாடல் சிறப்பு.

“புலமிக் கவரைப் புலமை தெரிதல்” பாடல் 5ஐ பழமொழி நானூற்றிலிருந்து பாடலைப் பகிர்ந்து, அதற்கு ஒப்பாக கம்பன் கையாண்ட பாடலையும் சேர்ந்து பகிர்ந்தார் திரு. இராம். 

கம்பராமாயணம் அகலிகை படலத்திலிருந்து 467 பாடலையும், தமிழ் என்று எப்படிப் பெயர் வந்தது என்றும் பகிர்ந்தார் திரு. பாலாஜி

நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் 
சேத்திரத் திருவெண்பாவிலிருந்து பாடல்களை இணைத்து அதற்கு விளக்கம் அளித்தார் திருமதி. பிரியா. 

சுவையான உரையாடல்களுடன் 
சிறப்பான கதம்ப இலக்கிய இரவாக அமைந்தது இன்றைய சங்க இலக்கிய  இரவு.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஒலிப் பதிவு செய்தார் திருமதி. பிரியா பாஸ்கரன்.


(link)
category_top

நவீன இலக்கிய இரவு (மே மாதம் பத்தாம் தேதி 2021)

ஒருங்கிணைப்பாளர் - மேனகா இன்று திரு ஆனந்தகுமார் அவர்கள் திருக்குறளோடு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிறுமி நிவேதா ஆனந்த் அவர்கள் திருப்பாவையிலிருந்து மார்கழி திங்கள் என்ற பாடலை பாடினார்.

(link) தொடர்ந்து திவ்யா அவர்கள் திரு எஸ்ரா அவர்களின் வெண்ணிற நினைவுகள் கட்டுரை தொகுப்பிலிருந்து விவரங்களை பகிர்ந்து கொண்டார். அதில் பல்வேறு இலக்கியத்தரமான திரை படைப்புகளை பற்றி எஸ்ராவின் பதிவுகளை அருமையாக எடுத்துரைத்தார். உதிர்ப்பூக்கள்,பசி, அழகி போன்ற படைப்புகள் விவரங்கள் பகிரப்பட்டன. அதன்பின் சரண்யா அவர்கள் இறையன்புவின் ஏழாவது அறிவு கட்டுரை தொகுப்பிலிருந்து சில கட்டுரைகளை பகிர்ந்தார்.அதில் பழியை உண்ணுதல் தொடர்பான கட்டுரை சிந்தனைக்குறியதாக இருந்தது. தொடர்ந்து மதுனிகா அவர்கள் சுந்தர ராமசாமி எழுதிய “அந்த ஐந்து நிமிடங்கள்” சிறுகதையை பகிர்ந்தார். சிறிய வயதில் வகுப்பில் தோல்வி அடையும் மாணவனின் மன வலியை சிறப்பாக சொல்லியது. அதுபற்றிய கருத்துக்களை ஆர்வலர்கள் பகிர்ந்து கொண்டனர்.
category_top

உலகின் மிக நீண்ட கழிவறை-அகர முதல்வன்

எழுத்தாளர் பற்றி: அகர முதல்வன் சமகால எழுத்தாளர்களில் நிறைய இலக்கிய நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர். ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து தொடர்ந்து இன்று பல வாசகர்களின் கவனத்தை பெறுகிறது.சயிந்தன்,ஷோபா சக்தி,தெய்வீகன்  போன்ற எழுத்தாளர்களின் வரிசையில் இவரும் முக்கியமான சமகால எழுத்தாளர்.

புத்தகத்தைப் பற்றி:
அகல் 
சித்தப்பாவின் கதை
உலகின் மிக நீண்ட கழிவறை 
நெடுநீர் முழை
எனக்கு சொந்தமில்லாத பூமியின் கடல் 
என மொத்தம் ஐந்து கதைகள்.யுத்தத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல்கள் வாசித்த அனுபவம் இருந்தாலும் கூட மனதை உலுக்கிய கதைகள் .ஷோபா சக்தியின் புத்தகத்தை வாசித்த அனுபவம் இந்த புத்தகத்தை முழுமையக வாசிக்கும் திடத்தை கொடுத்தது.அகர முதல்வன் அவர்கள் கவிதையை வாசித்து இருக்கிறேன் அவரது கவித்துவமான வரிகள் மூலம் வலியையும் அழகாக இந்த புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார். யாவரும் இணையத்தளத்தில் இவரது கவிதைகளை வாசிக்கலாம்.இவரது நூல்கள் கிண்டிலில் (kindle )உள்ளது .
cats_col

மண்ட்டோ படைப்புகள் -சாதத் ஹசன் மண்ட்டோ

"ஆசிரியரைப்  பற்றி :மண்ட்டோ அவர்களின் அறிமுகம் எனக்கு பவா செல்லதுரை அவர்கள் சொன்ன  அவமானம் என்ற சிறுகதையின் மூலமாகத்தான் கிடைத்தது.மண்ட்டோ அவர்களின் படைப்புக்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு புத்தகத்தை வாங்கினேன் .இப்போதுதான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.இவரது எழுத்தில் புதுமைப்பித்தன் அவர்களிடம் காணப்படும் எள்ளல் தொனி இருக்கிறது .சுதந்திரப் போராட்டத்தின் போதும் ,இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் ஏற்பட்ட கலவரங்களின் போது நிகழ்ந்த சம்பவங்களை கதை களமாக கொண்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார் .விலைமாதர்களை பற்றி அவர்களின் வாழ்க்கை சூழல்,ஏமாற்றங்கள் ,அவர்களை அந்த சூழலுக்கு தள்ளிய காரணங்கள் என்று அவரது படைப்புகள் தமிழில் ஜி .நாகராஜன் அவர்களின் எழுத்தை நினைவுபடுத்தியது.புத்தகத்தைப் பற்றி :இந்த புத்தகத்தில் கதைகள்,சொற்சித்திரங்கள்,நினைவோடைகள் என்று மண்ட்டோவின் படைப்புகள் அனைத்தும் உள்ளது.24 கதைகளில் எனக்கு நினைவில் நின்ற கதைகள் திற,மூன்றரையணா,இது 1919 இல் நடந்தது ,சில்லிட்டுப்போன சதை பிண்டம் மற்றும் கடைசி சல்யூட்.கடைசி சல்யூட் என்ற கதையில் தன்னுடைய நன்பனாக தன்னுடன் ஒன்றாக கைகோர்த்து எதிரியை வீழ்த்தியனோடு இன்று அவனையே எதிரியாக பார்க்கும் மனநிலையை எழுதியிருக்கும் விதம் கனமாக இருந்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவு நடந்த காலகட்டத்தை பல கதைகளில் நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளார்.நினைவில் நின்ற வரிகள்:சஹாய் என்ற கதையில் வரும் ""மதம் நம்பிக்கை எல்லாம் நம்முடைய உடலில் இல்லை.அதைக் கத்தி கொண்டோ,வாள் கொண்டோ அழிக்க முடியாது.மதம் என்பது இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களிலும் மனிதனைப் பிரித்துக் காட்ட கூடியது .எது மனிதனை மனிதனாக்குகிறதோ,அதுதான் மதம்.""மூன்றரையணா என்ற கதையில் ""ஒரு குற்றம் ஒருவனால் மட்டும் செய்யப்படுவது இல்லை.நிகழ்வுகள் குற்றம் செய்யப்படுவதை நோக்கி நகர்த்தித் தள்ளுகிறது.""விக்டர் ஹியூகோ வரிகள் ""மனிதனை குற்றங்கள் மற்றும் இன்னல்களை நோக்கி அழைத்து செல்லும் ஏணியை அகற்றிவிடுங்கள் ...ஆனால்,அந்த ஏணி எது என்று வியந்திருக்கிறேன்.அதில் எத்தனை படிகள் இருக்கின்றன?மண்ட்டோ அவர்கள் ஹிப்டுல்லா என்ற சொல்லை பயண்படுத்த ஆரம்பித்த கதை சுவாரசியமானது.மண்ட்டோவின் வாழ்க்கை பற்றி இந்த நூலில் அவருக்கு மிக நெருக்கமான உறவினர்கள் பகிர்ந்து உள்ளனர்."
cats_col

கள்ளம்-தஞ்சை பிரகாஷ்

"தஞ்சாவூர் சித்திர கலைஞர்கள் பற்றிய புதினம் இது. தஞ்சாவூர் கலைகள் சோழர்களின் ஆட்சிக்கு பிறகான நாயக்கர் ஆட்சியிலும் மராட்டிய ஆட்சியிலும் இருட்டடிக்கப்பட்டன. அன்றைக்கு தஞ்சை வந்த  தெலுங்கு பேசும் ராஜூக்கள் தஞ்சை ஓவிய கலையோடு தங்கள் கலையையும் சேர்த்து ஒரு கலையை உருவாக்கினார்கள். அந்த மராட்டிய+ தெலுங்கு+தமிழ் = கலவையான ஓவிய சிற்பங்கள் Thanjavur art painting என்ற பெயரில் பிரபலமடைந்தது.பரந்தாமராஜூ புதினத்தின் முக்கிய கதாபாத்திரம். இவர் தன் தந்தை வரையும் பாரம்பரிய ஓவியத்தில் போலி தனம் இருப்பதாக சொல்லி முரண்படுகிறார். எதிலும் பிடிப்பு இல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றும் இவர் தஞ்சையில் இருக்கும் மராட்டிய அரண்மனையின் அந்தபுரத்தில் சேவகம் செய்யும் ஒரு மராட்டிய பெண்ணை சந்திக்கிறான். அவளுடன் தஞ்சை பூக்காரத்தெருவிற்கு சென்று வாழும் இவன் அங்குள்ள பூக்கட்டும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு glass cut painting கலையை கற்று தருகிறான். அந்த பெண்களும் ராஜூக்களிடமிருந்து அழிந்து வரும் இக்கலையை கற்று கோவில்களில் செய்கிறார்கள்.பலத்தரப்பட்ட மனிதர்களின் கள்ளத்தை பேசுகிறது இப்புதினம்.  தத்துவார்த்த பக்கங்களை புரிந்து கொள்வது கடினமாகவும் அயற்சியை தருவதாகவும் இருந்தது."
cats_col

ஒரு சிறு இசை-வண்ணதாசன்

சாகித்திய அகடமி விருது பெற்ற பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். மனிதர்கள் கடைசிவரை இன்னொரு மனிதரிடம்  முற்றிலும் தன்னை வாசித்து காட்டி விடுவது இல்லை. ஒளித்து வைக்க வேண்டும்  என்று அல்ல, வாசிக்க அவசியமற்றவை என்று தீர்மானிக்கப்பட்ட பக்கங்கள் அவை. அந்த அற்புதமான பக்கங்களை தன்னுடைய வயோதிகத்தில் அசை போடுகின்றனர் இந்த கதைகளில்  வரும் சில கதைமாந்தர்கள். மற்றும் சிலரின் ரகசிய பக்கங்கள் அவர்களின்  இறப்புக்குப் பிறகு மற்றவர்களால் வாசிக்கப்படுகின்றன இந்த கதைகளில்.ஒவ்வொரு கதையும் தென்றலை போல மென்மையாக நம்மை வருடுகிறது. நிறைய கவித்துவமான வரிகள் வாழ்க்கையில் நாம்தேவையற்றது என்று கடந்து வந்த தருணங்களை உயர்வானவையாக காட்டுகிறது. எழுத்தாளரின் விவரினைகள் மிக நுட்பமாகவும் அழகாகவும் இருக்கின்றது.ஒரு சிறு இசை கதை பதினாறு வயதில் திருமணம் முடித்து சிறிது நாட்களிலேயே கணவனை இழந்த மூக்கம்மா ஆச்சியை பற்றியது. தன் ஒன்றுவிட்ட தங்கையின் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஆச்சி,  ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கையை பிடித்து பேசும் பழக்கமுடையவள். அவள் இறந்த பிறகு  ஆச்சியின் பெட்டியை திறப்பவர்களுக்கு ஒரு சிறு இசையாக ஒலிக்க தொடங்குகிறது அவளுடைய உணர்வுகள்.ஒரு தாமரை பூ , ஒரு குளம் கதையில் மனைவி இறந்த பிறகு மகனின் அரவணைப்பில் வாழும் அவர், ஜிப்பாவோ, செருப்போ தனியாக அணிய இயலாத வயோதிகத்தில் இருக்கிறார்.   முதன்முதல் பறவை வெளிவந்த முட்டையோட்டின் சிதறல்களை மண்ணிலிருந்து பொறுக்கியெடுத்து மீண்டும் அது தன்  முட்டைக்குள் புகுந்துவிட துடிக்கின்ற ஒற்றை பிரயாசையை போல் தன் கை விரல்களை பிடித்துக்கொண்டு இறந்த மனைவியின் இறப்பை நினைவு கூறுவதுமனதில்  கனமான இசையாக ஒலிக்க செய்கிறது.கணவன் மனைவி உறவு புரிந்து கொள்ளப்படாமலே தன் முதுமையில் முகத்தில் சிரிப்பே இல்லாமல் பொழுது போவதற்காக சதுரங்கம் விளையாடும் தாயம்மா அத்தை, தண்டவாளங்களை தாண்டுகிற காந்தி ஆசிரியை, பல ஆண்டு தாம்பத்தியதிற்கு பிறகு கணவனின் விவாகரத்துக்கு இசையும் ஜானகி என்று பெண் கதைமாந்தர்களின் உணர்வுகள் கவிதையாகி நம்முடம் பேசுகிறது.எழுபது வயதில் மனைவியை இழந்த கணவனும், கணவனை இழந்த மனைவியும் சிறகிலிருந்து பிரிந்த இறகாக வாழ்வதும்,நம்மை விட்டு பிரிந்தவர்களின் வாசனையை முகர்ந்தே அவர்களை தன்னுடன் வாழ செய்ய பிரயத்தனப்படுவதும் மனதுக்குள் ஒரு இனம் புரியாத இசையை இசைக்கிறது. ஒவ்வொரு உறவை பற்றி விமர்சிப்பதற்கும்  கொண்டாடுவதற்கும் எண்ணற்ற விடயங்கள் இருக்கின்றன. அந்த  ஒவ்வொரு தருணங்களையும்  ஒரு சிறு இசையாக வெளிப்படுத்தியிருக்கிறது இந்நூல்.
cats_col

ஒரு சிறு இசை-வண்ணதாசன்

சாகித்திய அகடமி விருது பெற்ற பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். மனிதர்கள் கடைசிவரை இன்னொரு மனிதரிடம்  முற்றிலும் தன்னை வாசித்து காட்டி விடுவது இல்லை. ஒளித்து வைக்க வேண்டும்  என்று அல்ல, வாசிக்க அவசியமற்றவை என்று தீர்மானிக்கப்பட்ட பக்கங்கள் அவை. அந்த அற்புதமான பக்கங்களை தன்னுடைய வயோதிகத்தில் அசை போடுகின்றனர் இந்த கதைகளில்  வரும் சில கதைமாந்தர்கள். மற்றும் சிலரின் ரகசிய பக்கங்கள் அவர்களின்  இறப்புக்குப் பிறகு மற்றவர்களால் வாசிக்கப்படுகின்றன இந்த கதைகளில்.ஒவ்வொரு கதையும் தென்றலை போல மென்மையாக நம்மை வருடுகிறது. நிறைய கவித்துவமான வரிகள் வாழ்க்கையில் நாம்தேவையற்றது என்று கடந்து வந்த தருணங்களை உயர்வானவையாக காட்டுகிறது. எழுத்தாளரின் விவரினைகள் மிக நுட்பமாகவும் அழகாகவும் இருக்கின்றது.ஒரு சிறு இசை கதை பதினாறு வயதில் திருமணம் முடித்து சிறிது நாட்களிலேயே கணவனை இழந்த மூக்கம்மா ஆச்சியை பற்றியது. தன் ஒன்றுவிட்ட தங்கையின் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஆச்சி,  ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கையை பிடித்து பேசும் பழக்கமுடையவள். அவள் இறந்த பிறகு  ஆச்சியின் பெட்டியை திறப்பவர்களுக்கு ஒரு சிறு இசையாக ஒலிக்க தொடங்குகிறது அவளுடைய உணர்வுகள்.ஒரு தாமரை பூ , ஒரு குளம் கதையில் மனைவி இறந்த பிறகு மகனின் அரவணைப்பில் வாழும் அவர், ஜிப்பாவோ, செருப்போ தனியாக அணிய இயலாத வயோதிகத்தில் இருக்கிறார்.   முதன்முதல் பறவை வெளிவந்த முட்டையோட்டின் சிதறல்களை மண்ணிலிருந்து பொறுக்கியெடுத்து மீண்டும் அது தன்  முட்டைக்குள் புகுந்துவிட துடிக்கின்ற ஒற்றை பிரயாசையை போல் தன் கை விரல்களை பிடித்துக்கொண்டு இறந்த மனைவியின் இறப்பை நினைவு கூறுவதுமனதில்  கனமான இசையாக ஒலிக்க செய்கிறது.கணவன் மனைவி உறவு புரிந்து கொள்ளப்படாமலே தன் முதுமையில் முகத்தில் சிரிப்பே இல்லாமல் பொழுது போவதற்காக சதுரங்கம் விளையாடும் தாயம்மா அத்தை, தண்டவாளங்களை தாண்டுகிற காந்தி ஆசிரியை, பல ஆண்டு தாம்பத்தியதிற்கு பிறகு கணவனின் விவாகரத்துக்கு இசையும் ஜானகி என்று பெண் கதைமாந்தர்களின் உணர்வுகள் கவிதையாகி நம்முடம் பேசுகிறது.எழுபது வயதில் மனைவியை இழந்த கணவனும், கணவனை இழந்த மனைவியும் சிறகிலிருந்து பிரிந்த இறகாக வாழ்வதும்,நம்மை விட்டு பிரிந்தவர்களின் வாசனையை முகர்ந்தே அவர்களை தன்னுடன் வாழ செய்ய பிரயத்தனப்படுவதும் மனதுக்குள் ஒரு இனம் புரியாத இசையை இசைக்கிறது. ஒவ்வொரு உறவை பற்றி விமர்சிப்பதற்கும்  கொண்டாடுவதற்கும் எண்ணற்ற விடயங்கள் இருக்கின்றன. அந்த  ஒவ்வொரு தருணங்களையும்  ஒரு சிறு இசையாக வெளிப்படுத்தியிருக்கிறது இந்நூல்.
cats_col

பாபிலோனின் பெரும்செல்வந்தன் - George Samuel Johnson

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு  முன் (1926 ம் ஆண்டு )  Geroge Samuel Johnson  என்பவரால் எழுதப்பட்டது  " Richest Man  in Babylon "  என்ற இந்த சிறிய புத்தகம் . புத்தகம் சிறிதானாலும் இதில்  உள்ள கருத்துக்களுக்காக  உலகம் முழுவதும்   தனி மனித நிதி மேலாண்மைக்கும் , திட்டமிடலுக்கும்  மிகச் சிறந்த புத்தகமாக  இது  பொருளாதார வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.அப்படி என்ன சிறப்பு என்பதை தெரிந்துகொள்வதற்கு  , ஏறத்தாழ 8000  ஆண்டுகளுக்கு முன் இருந்த பாபிலோன் நகரத்துக்கு நாம் செல்ல வேண்டும் (இன்றைய இராக் தலைநகர் பாக்தாத்  நகருக்கு அருகில் உள்ள   "ஹில்லா " , அன்றைய பாபிலோன்  ) . பாபிலோனின்  தொங்கும்தோட்டம் நாம் அறிந்ததே ,  தோட்டம் மட்டும் இல்லை , வானவியல் , அறிவியல் , கட்டிடக்கலை , பாலைவனத்தில் விவசாயம் ,முக்கியமாக செல்வம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய நகரம் பாபிலோன் .இத்தனைக்கும் பூகோள ரீதியாகவோ , அரசியல் ரீதியாகவோ , மண்வளத்திலோ , வணிகரீதியாகவோ  சிறப்பு பெற்ற நகரம் இல்லை அது , ஆனாலும் செல்வத்தில் கொழித்த நகரம் , எப்படி இது சாத்தியமானது ?  ஏன் எனில் , பணத்தை கையாள்வதில் அந்த நகரத்து மக்கள் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் , பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது , என்ன சொன்னார்கள் என்பதையும் காகிதம் கண்டுபிடிப்பதற்கு  முன்னே  களிமண் தட்டிகளில் எழுதி நூலகமாக வைத்துள்ளனர் . அகழ்வாராய்ச்சியில்  ஆயிரக்கணக்கான எழுதப்பட்ட  தட்டிகள் எடுக்கப்பட்டு , அதில்  இருந்ததை தொகுத்துள்ளதாக  கூறுகிறார் நூலாசிரியர் .பாபிலோனில் உள்ள இரண்டு  நண்பர்கள்  என்ன செய்தாலும் , எவ்வளவு உழைத்தாலும் பணம் நமக்கு தங்குவது இல்லையே என அவர்களுக்குள் புலம்புகிறார்கள் ,   பணம் கையில் தங்குவதற்கு என்ன ரகசியம்  என தெரிந்துகொள்ள  கிளம்புகிறார்கள்இன்னொரு புறம்  பாபிலோனின் அரசன் , மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று  அமைச்சரவையில் விசாரிக்க , மக்களிடம் பணம் இல்லை என்று பதில் வருகிறது , அரசனுக்கோ அதிர்ச்சி  ,சிறிது காலம் முன்புதான் மிகப் பெரிய பொருட்ச்செலவில்  அன்றைய உலகின் உயரமான மதில் சுவரை கட்டி முடித்திருந்தான் (நகரத்தை சுற்றி 140  அடி சுற்றுச்சுவர் ) , இதன் மூலமான வேலை வாய்ப்பு , பணப்புழக்கம் என  மக்களிடம் பணம் இருக்க வேண்டுமே ஏன் இல்லை என்று  கேட்கிறான் .மக்கள் வந்த பணத்தை  செலவழித்து விட்டார்கள் , அவர்களுக்கு சேமிக்க தெரியவில்லை என்று பதில் வருகிறது .புத்திசாலி அரசனின் அடுத்ததாக  , யார் இந்த நகரத்தின் பெரிய செல்வந்தன் நம் ஆர்கத் (Arkad ) தானே எனக் கேட்கிறான் ,ஆம் என்று அமைச்சர்கள் சொல்ல , முதற்கட்டமாக   நம் மக்கள்  நூறு பேரை தேர்ந்தெடுங்கள்,  பணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை பற்றி  ஆர்கத்தை படம் எடுக்க சொல்லலாம் , அவன் புத்திசாலி தனக்கு தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பான் என முடிவு செய்கிறான் ,நாம் முன்பு  விட்டுவிட நண்பர்களும் , அவர்களுடைய  சிறு வயது நண்பன் , இப்போதைய பெரும் பணக்காரன் ஆர்கத்தை தேடித்தான் வருகிறார்கள் .  அன்றைய பாபிலோனின்  பெரும் செல்வந்தனாக இருந்த ஆர்கத்  மீது அரசன் முதல் , ஆண்டி  வரை அனைவருக்கும்  மிக ஆச்சிரியம் , ஆர்கத் செல்வ குடும்பத்தில் பிறக்கவில்லை , நூலகத்தில் மண்  தட்டிகளை செய்யும் வேலை தான் செய்தான் , அதில் அப்படி ஒன்றும்  பெரிய வருமானம் இல்லை , மிகவும் நாணயமானவனும் கூட , எப்படி பொருள் சேர்த்தான் ?அர்க்கத் அரசன் சொன்னபடி , 100  பேரை அழைத்து , நண்பர்களே  பணம் சேர்ப்பது ஒன்றும் , ரகசியமோ , பெரிய சாதனையோ  இல்லை ,  எனக்கு என்ன செய்வது என்று , பசீர் என்ற  முதியவர் சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன் , அவரும் பெரிய செல்வந்தர் , நூலகத்திற்கு வந்த அவரிடம் நான் எப்படி பணம் சேர்ப்பது என்று கேட்க மூன்று ஆண்டுகள் சொல்லி கொடுத்தார் , நான் அவற்றை உங்களுக்கு சொல்கிறேன் என தனது பாடத்தை ஆரம்பிக்கிறான்அர்க்கத் பெரும்பாலும் நம்மிடம் இருக்கும்  ஒல்லியான பணப்பையை குண்டாக்க சொன்ன ஏழு  வழிகள்(இவற்றை கதைகளாக விரிவாக சொல்கிறார் , இந்த கட்டுரை புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இல்லை , சுருக்கம் என்பதால் , சுருங்கிவிட்டது ) >சம்பாதித்த பணத்தில் 10 சதவீதமாவது சேமியுங்கள் .>செலவழிப்பதை கட்டுப்படுத்துங்கள்> சேர்த்ததை பெருக்குவதற்கு வழி செய்யுங்கள் (வட்டி குட்டி போடும் , குட்டி வட்டி போடும் , குட்டி மறுபடியும் குட்டி போடும் , அது வட்டி போடும் , குட்டி ... வேண்டாம்  முதல் குட்டியில் அனைவருக்கும் புரிந்திருக்கும் )> சேர்த்த பணத்தை  இழக்காதீர்கள் (  நம்ம "warren buffet "  தாத்தாவும் இதைத்தான் சொல்கிறார்  "Never lose your  money " )> உங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டை வைத்துக்கொள்ளுங்கள் , அது தரும் நம்பிக்கை அலாதியானது> எதிர்கால வாழ்விற்கும் , ஓய்வுக்கும் பணம் தொடர்ந்து வருவதற்கு வழி செய்யங்கள்> வருமானத்தை பெருக்குங்கள் .அர்க்கத் சொன்னதை மக்கள் கடைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள் , சிறிது காலம் சென்று , அர்க்கத்தின் மகன்  தனியாக தொழில் தொடங்க வேறு நகரத்துக்கு சென்று , ஒன்றை பத்து ஆக்குகிறேன் என முதலீடு செய்து ( இன்றைய  BITCOIN  போல )  அனைத்தும் தொலைத்து நிற்கையில்  , தனது அப்பா தங்கத்தை ஈர்க்க சொல்லிக் கொடுத்த வழிகளை எண்ணிப்  பார்க்கிறான் , அதனை கடைபிடித்து மீண்டு வந்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறான் , அந்தப்  பாடம் (தங்கத்திற்கு பதில் பணமாக நாம் வைத்துக் கொள்ளலாம் )> தனது  வருமானத்தில் 10 % சேமிப்பவன் கையில் தங்கம் சேரும்> கையில் உள்ள தங்கத்தை , தனக்காக   வேலை வாங்க தெரியும்  புத்திசாலியிடம் தங்கம் சேரும்>பொறுமையாக , நீண்டகாலத்திற்கு , எச்சரிக்கையாக முதலீடு செய்பவனிடம் தங்கம் சேரும்>தெரியாததை  செய்தால் தங்கம் ஓடிவிடும்  தனக்கு தெரிந்த முதலீட்டை செய்பவனிடம் தங்கம் சேரும் ( youtube இல் சொன்னதை கேட்டு பங்கு வாங்காதீங்க ,படித்து தெரிந்து கொண்டு முதலீடு  செய்யுங்க என படிக்கவும் )> ஒரு ரூபாய் போட்டால் நூறு ரூபாய் எடுக்கலாம் என  முதலீடு  செய்தால்  தங்கம் கையை விட்டு ஓடி விடும் (quest coin , ஈமு கோழி , ஒரு லட்சத்திற்கு மாதம் பத்து சதவீத வட்டி பங்குச்  சந்தையில்  சம்பாதித்து கொடுக்கிறோம் போன்றவைகள் )பின் பாபிலோனில் காலம் செல்கிறது , மக்கள் பணத்தை  கையாள்வதில் புத்திசாலிகளாக மாறுகிறார்கள் , அவர்களில்  இருந்து  தங்கத்தை வட்டிக்கு விடும் ஒருவர் ,  "ஐயோ போச்சே!!! என புலம்புவதை விட  ,பணத்தில்  ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது "  என தன் அனுபவங்களை  சொல்கிறார் .பாபிலோனின் 140 அடி சுவர் எப்படியெல்லாம் எதிரிகளிடமிருந்து மக்களை காத்ததோ அதுபோல நாம் நம்மை சுற்றி  நமது முதலீடுகளின் மூலம் ஒரு சுவரை கட்டி காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கப்படுகிறது .நல்ல குடும்பத்தில் பிறந்து , பணத்தை தவறாக கையாண்டதால்  அடிமையாக விற்கப்பட்டு , தன் உறுதியான நிலைப்பாட்டால் , கடனை அடைத்து , சுதந்திர மனிதனான ஒட்டக வியாபாரியின் கதை நமக்கு சொல்லப்படுகிறது  ( கடன் இருந்தால்  வருமானத்தில்  20 % கடனை அடைக்க முதலில் எடுத்து வையுங்கள் , பட்டினி கிடந்தாலும் 70 % பணத்தில் வாழுங்கள் , 10 % சேமியுங்கள் )இதனோடு புத்தகம் முடிகிறது ,  பணம் , பணத்தை கையாள்வது எப்படி , எவ்வாறு  முதலீடு செய்வது என எந்தப்  பள்ளியும் , கல்லூரிகளும் , தொழில் படிப்புகளும் , நாம் வேலை செய்யும் நிறுவனுங்களும் , நமக்கு சொல்லிக்  கொடுப்பதில்லை , பணம் இருப்பவன் தொடர்ந்து பணக்காரன் ஆகிறான் , ஏழை மாடு  மாதிரி உழைத்தாலும்  மேலும் ஏழை ஆகிறான் , உலகம் முழுவதும் இதே   நிலைமை தான் . நமக்கு சொல்லி கொடுப்பதற்கு இந்த மாதிரி அரிதாக சில புத்தகங்களே உள்ளன பொருளாதார மந்த நிலை வரும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும்  இந்த சூழ்நிலையில் , இம்மாதிரி புத்தகங்களை படித்து நம்மையும் , நமது குடும்பத்தையும் ஓரளவேனும் காத்துக் கொள்வது நல்லது,  இல்லையென்றால் இருக்கவே இருக்கு   " YOLO  வழி " .  
cats_col

தினம் ஒரு கவிதை பாகம் 1 - ( கிண்டில் பதிப்பு) லதாமகன் / கிமு. கிபி. மதன்

தினம் ஒரு கவிதை பாகம் 1 - ( கிண்டில் பதிப்பு) லதாமகன்90 கவிஞர்கள் பல்வேறு தளத்தில் எழுதிய 90 கவிதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். ஒவ்வொரு கவிதையும்‌ அதனை ஒட்டிய தன்னுடைய  எண்ணங்களையும் விரிவாக அலசுகிறார் லதாமகன்‌.‌ஒவ்வொரு கவிதையையும் படித்தபின் நமக்குள் ஓடும் எண்ணங்கள் எழுத்தாளரின்‌ எண்ணங்களோடு சில இடங்களில் நேர்படுவதும் சில இடங்களில் மாறுபடுவதுமாக இந்தத் தொகுப்பு வித்தியாசமான கவிதை வாசிப்பு அனுபவத்தை தருகிறது."கிமு. கிபி. மதன்"பூமியின் உருவாக்கம், உயிர்களின் பிறப்பு,டைனோசர்களின் அரசாங்கத்திலிருந்து கி.பி வரையிலான உலக வரலாற்றை மிக எளிய நடையில் தனக்கே உரித்தான பாணியில் விவரிக்கிறார் மதன். மனிதர்களின் பிறப்பு , நாகரீக வளர்ச்சி, கலைகள், இலக்கியம் ,அரசர்களின் ஆட்சி , போர் என உலகின்‌ பல்வேறு வரலாற்றினை‌ப் பற்றி‌ இந்ந நூலில் அறிந்துக் கொள்ளலாம்."
cats_col

குட்டி இளவரசன் - அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ( Antoine de Saint-Exupery)

உலகமே போற்றும் ஒரு நாவல், பக்கமோ நூறு தான், ஒரே நாளில் படித்துவிடலாம் என்று நம்பி புத்தகத்தைப் படித்தே.......ன். தமிழில் தான் இருந்தது என்றாலும், ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் விளங்கியது என்றாலும், அதன் ஓட்டத்தை புரிந்துகொள்வதில் சிரமப்பட்டேன்.  ஒரு வேலை இது  கற்பூரமோ? நமக்கு இதன் வாசம் புரியவில்லையோ என்று தோன்றியது.  வயதானவர்களுக்கு இந்தப் புத்தகம் புரியாது, குழந்தை மனம் உள்ளவர்களுக்கே இது புரியும் என்று கேள்விபட்டேன். "இது என்ன என் இளைய மனதிற்கு வந்த சோதனை" என்று நினைத்து இதைப் படித்துவிட்டு நாமும் புகழ்ந்து தள்ளிவிடவேண்டும், அப்பொழுதுதான் நானும் இளமையானவன் என்று நம்புவார்கள்,  என்று நினைத்துப் படித்தேன்.  பிறகு இந்தப்புத்தகம் பற்றிய எஸ். ரா அவர்களின் பேச்சு, கூகுலாண்டவர் சொன்னது என்று சிலவற்றைத் தேடிப் பிடித்துப் படித்தேன். . புத்தகத்தின் சில இடங்கள் மிகப் பிரமாதமாக இருந்து.  வெகு சில கதாபாத்திரம், குழப்பம் இல்லாத நடை என்று சிரமம் இல்லாமல் படிக்க முடிந்தது.  சில இடங்களை ஏன் அப்படிச் சொல்கிறார்கள். இது ஏதேனும் படிமமா என்று குழப்பம் நிலவுகிறது. எவ்விடத்தில் அலுப்புத்தட்டவில்லை என்பது உண்மை. சில பொன்மொழிகள் "பெரியவர்களுக்கு எப்பொழுதுமே எண்கள் தான் முக்கியம்" - இது சரிதான். நானும் கூட இந்தப்புத்தகம் 100 பக்கங்கள் என்று தெரிந்தே தேர்ந்தெடுத்தேன். "இதயத்திற்கும் பார்வை உண்டு. அது கண்களுக்குத் தென்படாததைப் பார்க்க முடியும்" "வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல. அவை கண்ணுக்குத் தெரியாத சிரிப்பு" எஸ் ரா அவர்களின் சொற்களில் "நமக்குள் உள்ள சிறுவனை விழிப்படையச் செய்வதற்காக ஒரு முறை  அவசியம் குட்டி இளவரசனை வாசியுங்கள். கவித்துமான அனுபவத்தைப் பெறுவீர்கள்"
cats_col

பிரபஞ்சன் கதைகள் / கதா விலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்

பிரபஞ்சன் கதைகள் பிரபஞ்சன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு.  எங்கள் ஊர்காரார் என்ற பாசத்தில், அவரை நெருக்கமாக உணர்கிறேன்.  மூன்று பாகங்களும் Farmington நூலகத்தில் உள்ளது. முதல் பாகம் அங்கொன்றும் இங்கொன்றும் படித்துள்ளேன். இரண்டாவது பாகத்தைக் கடந்த 20 நாட்களாகப் படித்துக்கொண்டிருந்தேன். பிரபஞ்சனின் கதை ஆளுமை பற்றி நான் சொல்லி உங்களுக்குத்தெரிய வேண்டியதில்லை. எல்லா கதைகளுமே நன்றாக இருந்தாலும், ஒரு சில கதைகள் மிகவும் பிடித்திருந்தன. கதைகளின் பெயர்களைக் குறித்துவைத்துக் கொள்ளவில்லை.  புத்தகத்தை எங்கோ தொலைத்துவிட்டேன் வேறு. கடைசியாகப் படித்து மிக மிக ரசித்த கதை "தபால்காரர் பொண்டாட்டி".  ஒரு பொது இடத்தில் இந்த கதையைப் படித்தேன், கதை முடிந்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கவே  முடியவில்லை.  கதை என்று எழுதினால் இப்படி அல்லவா எழுதவேண்டும் என்று நான் நினைத்த கதை.  கதையின் கடைசி வரியில், கதையின் மொத்த கண்ணோட்டமே மாறிவிடும் அதிசயம் அது.    கதா விலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்   இந்தப் புத்தகத்தையே இப்பொழுதுதான் படிக்கிறாயா? என்று கேட்கும் அளவுக்கு இது சற்றே பழைய புத்தகம். இருந்தாலும் இன்னும் சுவை குன்றாத புத்தகம் இதில் எஸ். ரா அவர்களுக்கு மிகவும் பிடித்தமான 50 எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைக்கிறார். தன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச் சொல்லி, அதனோடு தொடர்புடைய ஒரு எழுத்தாளரின் கதையையும் சொல்கிறார். கதை எல்லாம் வெறும் கற்பனை அல்ல, அது அனுபவத்தின் வெளிப்பாடு என்று  புரிகிறது. சில நேரங்களில் கதையை விட அவரது அனுபவம் மிகவும் நன்றாக உள்ளது போலத் தோன்றியது. இவர் 50 எழுத்தாளர்களைச் சொல்கிறாரே தவிர, அவர்களை 1, 2 , 3 என்று வரிசைப்படுத்தவில்லை. இருந்தாலும், பாரதியாரை 50ஆவது எழுத்தாளராகப் பார்த்தது சற்று வருத்தமாக இருந்தது.
cats_col

மனிதர்கள் மத்தியில்-பிரபஞ்சன் / அசோகவனம் செல்லும் கடைசி ரயில்- அகதா

மனிதர்கள் மத்தியில் - பிரபஞ்சன்‘காக்கைச் சிறகு முதல் சனிக்கிழமை ஜீவிகள்’ வரை எத்தனை சிறுகதைகள் என்று சொல்ல மாட்டேன். எத்தனை எத்தனை மனிதர்கள், உணர்வுகள், அனுபவங்கள், வாழ்க்கைநிலைகள்…விளிம்புநிலை மனித்ரகளாக வெளிப்பார்வைக்கு தெரிபவர்களின் அகவெளி எவ்வளவு அகண்டு விரிந்து எல்லையற்று விரிந்து நிற்கிறது என வியப்பாக உள்ளது. இன்னும் பல தடவை படித்து அசை போட வேண்டும் என தோன்றும் நல்ல நூல்.அசோகவனம் செல்லும் கடைசி ரயில்- அகதாநூலின் தலைப்பே சொல்லி விடுகிறது, இதுவொரு பெண்ணியம் பேசும் கவிதைத் தொகுப்பு என்பதை. மிக எளிய சொற்களில், ஆழமான கருத்துக்களை எள்ளலாகவும், எதார்த்தமாகவும் சொல்லிச் செல்கிறார் கவிஞர். அகதா. செயற்கை கருத்தரிப்பு, சாதீயக் கொலை என சமீபத்திய சமூக நடப்புகளை தன் வார்த்தை வார்ப்புகளில் கவிதையாக்கி தந்துள்ளார் அகதா. நுண்மனக்குமுறல் கூறும் பெண்ணியக்கவிதைகள் பல ஊமைக் காய உண்மைகளைக் கூறிச் செல்கின்றன. நூலின் தலைப்பாக அமைந்த கடைசி கவிதை கனமாக இன்னும் இருக்கிறது இதயத்தை விட்டு இறங்காமல்.
cats_col

சூழ்-சோ. தருமன்

எட்டயபுர ஜமீனுக்கு உட்பட்ட கிராமங்களான கடலையூர், உருளைக்குடியில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தைச்(தேவேந்திர குல வேளாளர்- குடும்பர்) சார்ந்த மக்களின் வாழ்வியல் , மற்ற சமூகத்துடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு, அவர்களின் தொழில் , பழக்க வழக்கங்கள், வழிபாடு  போன்றவற்றை விவரிக்கிறது இந்த நூல். உருளைக்குடி கிராமத்தில் உள்ள கண்மாய்தான் இந்த நூலில் கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறது. இந்த நூலின் தலைப்பு ""சூழ்"" என்று பெயரிட்டிருப்பதே நீர் நிறைந்த கண்மாயையும், வயிறு நிறைந்த கர்பிணிகளைப் பற்றியும் மையக்கருவாக வைத்து எழுதப்பட்டிருப்பதுதான் காரணமாக இருக்க முடியும்.கண்மாயில் நீர் வற்றியவுடன் கரம்பைமண்ணை(களிமண்)  வயல்வெளிகளுக்கு ஓட்டுவதிலிருந்து மீண்டும் கண்மாயில் நீர் நிறைந்ததும் உழவு உழுது பயிரிட்டு அறுவடை செய்யும் வரையில் அம்மக்களின் வாழ்வியலை சிறப்பாக எடுத்துரைக்கிறது.அக்கிராமத்தில் உள்ள நாட்டார் தெய்வங்கள்(மடைக்கருப்பன், உளிகருப்பன், கொரவன் சிலை, இருளப்பன்)  அனைத்தின் வரலாறும், அத்தெய்வங்களை அம்மக்கள் வழிபட்ட முறையையும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு உட்பட்ட குலதெய்வத்தை மற்ற சமூகத்தினர் மதித்த விதம் போன்றவற்றை தெளிவாக விவரித்திருக்கிறது. மனிதர்களுக்கிடையே இருந்த பொறாமை , வன்மம் , காதல் ,காமம் முடிவில் கொலைபாதகத்தில் முடித்ததால் உருவானதுதான் நாட்டார் தெய்வங்கள் என்ற கருத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது.முத்துவீரன் தாத்தாவின் கேலியும் , கிண்டலும் நகைச்சுவைக் கலந்த ஆபாச பேச்சும் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் தாத்தாவை கண்முன்னே கொண்டுவருகிறது. கொப்புளாயி, கீழ்நாட்டுக்குறிச்சி அய்யர் , மகாலிங்கம் பிள்ளை , சதாசிவம் பண்டாரத்தார் போன்ற கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவை. எட்டயபுர ஜமீன் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்ததையும் , பாஞ்சாலக்குறிச்சி ஜமீனுக்கு எதிராக இருந்ததையும் விளக்குகிறது.  பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் வெள்ளையர்கள் கண்ணில் படாமல் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த போது எட்டயபுர ஜமீனுக்குட்பட்ட உருளைக்குடி கிராமத்திற்கு வந்தபோது தன் குதிரையின் லாடம் அறுந்து நடக்கமுடியாமல் இருந்தவேளையில் அவ்வூரைச் சேர்ந்த பனையேறி எலியன் மற்றும் பிச்சை ஆசாரி இருவரும் குதிரையின் லாடத்தை சரிசெய்து கட்டமொம்மனுக்கு உதவியதால் அவர்களுக்கு கட்டமொம்மன் வழங்கிய தங்க நகைகளை யார் கண்ணிலும் படாமல் பாதுகாக்க பாடுபடுவதும் இடையில் கோணக்கண்ணன் இவர்களை சந்தேகித்து பின்தொடர்வதும் படிக்கையில் பெரும் நகைச்சுவை.இந்த நகைகளைப்  பதுக்கி வைக்க படும்பாடு அடுத்த தலைமுறைக்கும் அதாவது எலியன் மற்றும் பிச்சை ஆசாரி மகன்களுக்கும் நகர்ந்து வெள்ளையர்கள் நாட்டைவிட்டு வெளியேறினால் நகைகளை எளிதாக பயன்படுத்த முடியும் என்று அந்த நாளிற்க்காக காத்துக் கொண்டிருப்பதும் படிக்கையில் நகைச்சுவை.செருமலாயி குஞ்சான் என்ற மாந்த்ரீகவாதி எட்டயபுர அரசனை அறிவுரையால் சாபமிடும் தொனி உச்சம். உன் அதிகாரம் குலைந்து தலைமுறை தலைமுறையாக நீங்களே ஆள்வது என்பது மாறி அதிகாரம் ஐந்து வருடத்திற்கொருமுறை என்று மாறும் என சொல்வதில் தொடங்கி இறுதியில் கொட்டு அடிப்பவன், குழல் ஊதுவன் , பனையேறுபவன், பிச்சை எடுப்பவன் , கேளிக்கைக்காரனெல்லாம் உன் நாட்டை ஆழ்வார்கள் என்று சொல்வதும், உன் வம்சத்தின் வரலாறை எதிர்காலத்தில் மக்கள் கேலி செய்து சிரித்து மகிழ்வார்கள்,வருமானத்திற்கு வழியில்லாமல் கள்ளர்களாக உங்கள் தொழில் மாறும் என்று சொல்வதெல்லாம் படிக்கும்போது எனக்கென்னவோ நூலாசிரியரின் அரசியல் கருத்தாக தெரிகிறது அந்த கருத்தில் எனக்கு சற்று நெருடல்(கொட்டு அடிப்பவன், குழல் ஊதுவன் , பனையேறுபவன், கேளிக்கைக்காரன் என்று யாரை மனதில் வைத்து சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்ளலாம், அவர்கள் முதலமைச்சராக வரக்கூடாதா என்ன?). எலியன் மற்றும் பிச்சை ஆசாரி பேரன்கள் ஊரில் பெரிய அரசியல் புள்ளியாக மாறுவதும் அதுவும் சாமி கும்பிடாத கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஊரில் உள்ளவர்கள் பேசுவதை போல கதைக்கருத்தாக்கி இறுதியில் இலவசப் பொருட்கள், சீமைக் கருவேல மரங்கள், திலாப்பியா கெண்டை மீன்கள், லகான் கோழிகள் , கால்நடை ஊசி இவையெல்லாம் ஊரை கெடுத்துவிட்டது என்பது சராசரி நம்மாழ்வார் , பாரிசாலன் வரிசையில் நூலாசிரியர் நிற்கிறார் என்பதையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. 
cats_col

மேலே...உயரே...உச்சியிலே... - வெ.இறையன்பு I.A .S

"இந்த நூல் மனித சிந்தனைகள் எவ்வாறு மேம்பட வேண்டும் அதாவது ஒரே மாதிரி சிந்தனையிலிருந்து விடுபட்டு சற்றே மாறுபட்டு சிந்தித்தால் மட்டுமே நாம் அடுத்தக் கட்டத்திற்கு அல்லது உயரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதுதான் முதன்மைக் கருத்தாக இருக்கிறது. இப்படி வழக்கமான சிந்தனையிலிருந்து வேறுபட்டு சிந்திப்பதற்கு பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்(Out of box thinking) என்று பெயரிட்டு அதுகுறித்து பல கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். இப்படி மாறுபட்டு சிந்திக்கும் முறையை மேற்கு உலகம் கையிலெடுத்து பல சாதனைகளை படைப்பதற்கு முன்பே நாம் இங்கு சிந்தித்திருக்கிறோம் என்று பல சம்பவங்களை பட்டியலிட்டிருக்கிறார்.நம் நாட்டில் உள்ள புராண, இதிகாச கதைகளில் வரும் கதைமாந்தர்கள் வழக்கமான சிந்தனையிலிருந்து விடுபட்டு சற்று வேறுபட்ட சிந்தனையால் எடுத்த முடிவுகளை பற்றி விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். உதாரணமாக - சுயம்வரம் தேடி நாடெல்லாம் சுற்றியும் எந்த வரணும் கிடைக்காத சாவித்திரி இறுதியில் சத்தியவானை தேர்ந்தெடுத்த பிறகு அவனும் இறந்துவிட எமனிடம் அவள் வரம் கேட்ட விதம் - யாசகன் ஒருவன் பகடையில் துரியோதனனை வீழ்த்தி குதிரையையும், 23  பசுக்களையும் வென்ற பிறகு இந்த விடயம் சகுனிக்கு தெரிந்து அந்த யாசகனை பகடைக்கு அழைத்த விதம், அதாவது 23 பசுக்களுக்கு பதிலாக 24  பசுக்களை அந்த யாசகன் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்ல அதற்கு அந்த வாசகன் மறுப்புத் தெரிவிக்க ஒரு பசு கர்ப்பமாக இருப்பதாக சொல்லி அவனை பகடைக்கு வரவழைத்து துரியோதனன் இழந்த அனைத்தையும் மீட்டது, அந்த வாசகன் கொடுத்த தகவலை வைத்தே தருமனை பகடைக்கு அழைத்த விதம் - பேராசிரியர் நுக்ளியட் எகிப்து பிரமிடுகளின் உயரத்தை அளந்து சொன்ன விதம் - உலக நாடுகள் விழிப்பியல் காட்சி பிழை(Optical illusion ) பற்றி அறிந்தாய்வதற்கு முன்பே நம் நாட்டில் உள்ள பல கோவில்களில்(தாராசுரம் , தாரமங்கலம் கோவில் கலைச்சிற்பங்கள்) கலைச்சிற்பங்கள் இருந்ததும் அவை செதுக்கப்பட்ட விதம் - பைபிளில் சாலமன் கருத்துக்கள் சொன்ன விதம் இப்படி எத்தனையோ சம்பவங்களை மேற்கோள் காட்டி அவையனைத்தும் வழக்கமான சிந்தனையிலிருந்து மாறுப்பட்ட சிந்தனைகள் தான் என்று எடுத்துரைக்கிறார்.இன்னும் எத்தனையோ கணிதப் புதிர்கள் , வரலாற்றுச் சம்பவங்கள் , அறிவியல் சான்றுகள் என்று மேற்கோள் காட்டி மாறுபட்ட சிந்தனைகளால் விளைந்த மாற்றத்தையும் விளக்குகிறார்.மொத்தத்தில் ஒரு மனிதன் ஒரு துறையில் தன் உயரத்தை அடைய வழக்கமான சிந்தனையிலிருந்து விடுபட்டு மாறுப்பட்ட சிந்தனையில் விடைக் காண வேண்டும். பழமையான சிந்தனையெனும் கூட்டுப்புழுவிலிருந்து புதிய சிந்தனையெனும் பட்டாம்பூச்சி சிறகடித்தால்  நம் உயரம் மாறும் என்பது இந்த நூலின் பொதுக்கருத்தாக இருக்கிறது.நன்றி."
cats_col

சங்க இலக்கிய இரவு - 04 ஏப்ரல் 2021

இன்றைய சங்கத் தமிழ் நிகழ்ச்சி நிரல் (4/4/2022)ஒருங்கிணைப்பாளர்:திருமதி.லதா குமார்ஒலிப்பதிவு:திரு. ராம்குமார் திரு. ராம்குமார் அவர்கள் திருக்குறளில் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ள குறள் 972 யைப் பகிர்ந்தார்.​  திரு. பாலாஜி அவர்கள் கம்பராமாயணம்/ நாட்டுப் படலத்திலிருந்து மக்களது சிறப்பைக் கூறும்  84 வது பாடலையும், நாட்டின் வளத்தைக் கூறும் 86வது பாடலையும் பகிர்ந்து அதை மிக விரிவாகவும், சுவைபடவும் கூறினார். திருமதி ப்ரியா அவர்கள் கம்பராமாயணம்/ யுத்த காண்டம்/ வீடணன் அடைக்கலப் படலதிலிருந்தும், அயோத்தியா காண்டம் / கங்கைப் படலத்திலிருந்தும் இரண்டு பாடல்களை கூறி அறிவுரையின் முக்கியத்துவத்தையும், ஒரு உவமைக்கு பல உவமைகள் கூறும் ஒரு அரிய  பாடலையும் விளக்கத்துடன் பகிர்ந்தார். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் நடுநிலைமை அதிகாரத்தில் உள்ள 113 வது குறளையும் சுருக்கமாகப் பகிர்ந்தார். திருமதி லதா அவர்கள் சங்க கால தமிழகத்தின் எல்லைகளைப் பற்றிக் கூறும் புறநானூற்று பாடல்களான 6 & 17 யும், சிலப்பதிகாரம்/ காடு காண் காதையில் வரும் 19-22 வரிகளையும் சுருக்கமாகப் பகிர்ந்தார். இறுதியாக திரு. ராம்குமார் அவர்களின் சங்க இலக்கிய வினா - விடை நிகழ்ச்சியுடன் மிக இனிதாக நிறைவு பெற்றது.இந்நிகழ்வில் பங்கு கொண்டு இதைச் சிறப்பான ஒரு இரவாக மாற்றியவர்களுக்கும், இதைக் கேட்கும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.எழுத்தாக்கம் :திருமதி.லதா குமார்.(link)
cats_col

சங்க இலக்கிய இரவு - 31 மார்ச் 2022

சங்க இலக்கிய இரவு - 31 மார்ச் 2022இன்றைய சங்கத் தமிழ் நிகழ்ச்சி நிரல் ( 3/21/2022 )ஒருங்கிணைப்பாளர்: திரு. ராம் குமார்ஒலிப்பதிவு:திரு. ராம் குமார்  இன்றைய நிகழ்வு:  - திரு. ஜெயகுமார் அவர்கள் பொருட்பாலில் உள்ள வினைசெயல்வகை என்ற அதிகாரத்திலிருந்து ஒரு  குறளை பகிர்ந்து கொண்டு, மிக அருமையான விளக்கமும் தந்தார். - திரு. பாலாஜி அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு, கம்பராமாயணம்  நாட்டுப் படலத்திலிருந்து  மாந்தர் சிறப்பைக் கூறும் 67 வது பாடல் மற்றும் பல வகை புகைகளைக் கொண்டு நாட்டின் வளத்தைக் கூறும் 41வது பாடலையும் பகிர்ந்து, அதை மிக விரிவாகவும், சுவைபடவும் கூறினார்.- திருமதி.ப்ரியா அவர்கள் குருந்தொகையில் கபிலர் பாடிய 288 வது பாடலைக் கூறி துன்பதிலும் இன்பம் காணும் தலைவியை நம் கண் முன் நிறுத்தினார். மேலும் கபிலரின் சிறப்பைக் கூறும் புறநானூற்று பாடலையும் (126) சுருக்கமாகப் பகிர்ந்தார்.- திருமதி. லதா அவர்கள் மார்ச் 21 - உலக கவிதை தினத்தை முன்னிட்டு, சங்க கால புலவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது திறமை பற்றி நயம்பட எடுத்துக் கூறும் புறநானூற்று பாடலைக் (47) கதை வடிவில் சொன்னார்.  - திரு. ராம் குமார் அவர்கள் சிலப்பதிகாரத்தில் வரும் கொலைக்களக் காதையில் உள்ள 'வினைவிளை... கொணர்க ஈங்கெனக்' (148-153) என்ற பாடல் வரிகளையும், வினையின் விளைவை பற்றியும் விளக்கமாக கூறினார்.இதைத் தொடர்ந்து மடக்கு அணி பற்றிய கலகலப்பான கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி மிக இனிதாக நிறைவு பெற்றது.இந்நிகழ்வில் பங்கு கொண்டு இதைச் சிறப்பான ஒரு இரவாக மாற்றியவர்களுக்கும், இதைக் கேட்கும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.எழுத்தாக்கம் :திருமதி. லதா குமார்.(link)
cats_col

எது நிற்கும்? - கரிச்சான் குஞ்சு

 முன்னுரை :"எது நிற்கும்?" புத்தகம் மொத்தம் 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.இந்த கதைகளை தொகுத்தவர் அரவிந்தன். அனைத்து கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. முக்கியமாக சமூக ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள், குடும்ப உறவுகளின் நிலவும் போலித்தனங்கள், சுயநலன்கள், மரபு வழிபட்ட பார்வை கண்ணோட்டத்துடன் இருக்கக்கூடிய கதைகள் இந்த சிறுகதை தொகுப்பில் உள்ளது. பகுப்பாய்வு :இந்த சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் பல இருந்தாலும் இங்கு நான் ஒரு சில கதைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.- “ குசமேட்டுச் ஜோதி” - இந்த சிறுகதை மக்களிடம் நிலவும் சராசரிஆன்மீக தேடலை பயன்படுத்தி போலி ஆன்மீக குருமார்களை உருவாக்கி அதன் மூலம் மக்களின் லாபம் அடையும் மனிதர்களைப் பற்றிய கதை. சராசரி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் அவனிடம் விற்று விடலாம் அதில் ஆன்மீகம் மிகவும் சுலபம்.- "காதம்பரி" - எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கதை காதம்பரி. இந்த கதை ஒரு எழுச்சி புலவன் அரசை எதிர்த்து பல பாடல்களை இயற்றுகிறான். பின்பு அரசு பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து எதிர்க்க முடியாமல் தன் நண்பர்கள் உடன் காட்டுக்கு தப்பி செல்கிறான்.அங்கு காட்டில் வாழும் காதம்பரியை சந்திக்கிறான். அவர்கள் இருவரும் பிடித்து போய் கணவன் மனைவியாக மாறுகிறார்கள்.அவளுக்கு நாட்டு மனிதர்களைப் போல உடை உடுத்தி அவர்களின் வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை.புலவனும் தன் மனைவி ஆசையை நிறைவேற்றலாம் என்று நாட்டுக்கு செல்ல கிளம்புகிறான். புத்த அரசன் ஆட்சியில் நாடு இருக்கிறது. தன்னால் இந்த அரசுடன் ஒன்றி வாழ முடியுமா என்று குழப்பத்துடன் நாட்டில் குடியேறுகிறான்.காதம்பரியின் ஆசைக்கிணங்க தனது பல சுய கௌரவங்களை விட்டு நாட்டு மக்களுடன் ஒத்து போய் சாமானிய வாழ முடிவு எடுத்த தருணம். அவனுக்கு அரசனிடம் இருந்து அழைப்பு வருகிறது. அரசன் அவனை அரசவைப் புலவனாக பதவி கொடுக்கிறான். புலவனுக்கு அரசாங்க குடியிருப்பு கொடுக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை தான் காதாம்ரியின் ஆசை. தன் மனைவிக்காக தனக்கு ஏற்பில்லாதவற்றையும் சகித்துக் கொள்கிறான். ஒரு நாள் வீட்டில் புலவன் எழுதி எழுதி பார்த்து கவிதைகளை கிழித்து போடுவதை கவனித்த காதம்பரி என்னவாயிற்று என்று கேட்கிறாள். அரசனைப் புகழ்ந்து கவிதைவேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கிறார்கள் என்று காதாமரிடம் சொல்கிறான். கிளம்புங்கள் என்றால் காதம்பரி .எழுதிய கவிதைகளை எரிந்து விட்டு தன் கணவனை அழைத்துக் கொண்டு காட்டை நோக்கி செல்கிறாள்.மறுபடியும் லட்சிய கவிஞனாக மாறுகிறான். எழுத்து நடை:கருச்சான் குஞ்சு அவர்கள் எழுத்து மிகவும் செம்மையான மொழி கட்டமைப்பு உடையது, தேவைப்படும் இடங்களில் மட்டுமே வட்டார மொழியை உபயோகப்படுத்தி மற்ற இடங்களில் அவருடைய மொழி ஆளுமை மூலம் கதை கட்டமைப்புக்கு தேவையான உரைநடை மொழியாக கதையை சொல்கிறார்.வரலாற்று / கலாச்சார சூழல்:கரிச்சான் குஞ்சு அவர்கள் கும்பகோணம் தஞ்சை வட்டாரங்களில் வாழ்ந்த ஒரு எழுத்தாளர் அவர் கதை மாந்தர்களும் அவர் கதைகளும் அந்த பகுதியை சுற்றியே அமைந்துள்ளன முக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள்/சூழ்நிலைகளை சார்ந்த கதைகள்.முடிவுரை :லட்சியவாதிகளின் வாழ்வியல் தருணங்கள், சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை, போலி சித்தாந்தம் ஆளுமைகளை கேலி செய்தும். சில தத்துவ விசாரணமுள்ள( “மானுடம் வென்றதம்மா”) சிறுகதைகளும் இதில் அடங்கும்.இந்த தொகுப்பு எனக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் ஏற்படுத்தியது மற்றும் கருச்சான் குஞ்சு எழுத்துக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த தொகுப்பு எனக்கு உதவியது.
cats_col

மந்திரக்குடை ( சிறுவர் இலக்கியம்) - ஞா. கலையரசி

குழந்தைகளுக்கு சொல்ல ஒரு இரவுக்கதை வேண்டுமா? அதுவும் காடு, விலங்குகள் என்று சுவாரசியமாய் இருக்க வேண்டுமா? மந்திரத்தின் புனைவு வேண்டுமா? அதுவும் பெற்றோர் உதவி இல்லாமல் அவர்களே படித்துக் கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் உங்களுக்கானது இந்த நூல்.பாரதி புத்தகாலயம் வெளியீடாக இருந்தாலும் அமேசான் கிண்டில் வடிவத்திலும் கிடைக்கும் ஒரு அழகிய ஓவியங்களுடன் கூடிய குட்டி புத்தகம். 6-12 வயதுள்ள குழந்தைகளுக்கான கதைத்தளம். வண்ணங்கள், விலங்குகள்,காடு, காட்டு விலங்குகளின் இயற்கையான செயல்கள், அன்பு, தவறு செய்யும் இயல்பு, ரகசியம் என்று குழந்தைகளுக்கு பிடித்த எல்லாவற்றையும் சேர்த்து செய்த ஒரு இனிப்பான கதை இது.குறுகிய வாக்கியங்கள், வசன நடை, இயல்பான தொனி, குறைந்த பக்கங்கள் என்று  சிறப்பு அம்சங்கள் நிறைந்து இருக்கிறது.
cats_col

கதாவிலாசம் - எஸ். ராமகிருஷ்ணன்

கதாவிலாசம் தமிழின் 50 எழுத்தாளர்களின் விலாசத்தையும் அவர்களின் கதைகளையும் அறிமுகப்படுத்துகிறது.  ஒவ்வொரு எழுத்தாளர் பற்றிய சிறு குறிப்பும் இருக்கின்றது. தனக்கு நேர்ந்த அனுபவங்களோடு எழுத்தாளர்களின் கதைகளை இணைத்து ஒப்புமை படுத்தி இந்த நூலை ஆசிரியர் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு. வாசிக்கும் பொழுது நம்  இளமை காலத்து அனுபவங்களை நம் கண் முன்னே நிழலாட செய்கிறது, இந்த சமூகத்தின் மீது கோபம் கொள்ள செய்கிறது, எளிய மனிதர்களை நேசிக்க செய்கிறது. ஆசிரியரின் ஒவ்வொரு அனுபவமும் நம்முள்  எதையோ கடத்தி செல்கிறது. அவற்றுள் சில:வண்ணநிலவனின் எஸ்தர் கதையை சொல்லும்போது  ஒவ்வொருவரின் சொந்த ஊரும்  கண்ணுக்கு தெரியாத முத்திரைகளை நம்மீது குத்தி அதன் நினைவுகளோடு எப்படி வாழ்கிறோம் என்கிற ஏக்கத்தை கொடுக்கிறார்.கரிச்சான் குஞ்சுவின் ரத்த சுவை  கதையோடு சொந்த வீடு கட்டுவதற்காக ஒருவன் எவ்வளவு அவமானங்களையும் கடன் தொல்லையையும் அனுபவிக்கிறான் என்று சொல்லும் போது மனது கணமாகிறது.மா.அரங்கநாதன் ஏடு தொடங்கல் கதையின் மூலம் முதல் முதலாக எழுத்து பழக இருந்த பண்பாட்டை மறந்ததை போல நமது  பள்ளிகளில் மணி அடிக்க பயன்படுத்திய இரும்பு தண்டவாளத்தை நினைவு கூறுவது அழகு.தமயந்தியின் அனல்மின் நிலையங்கள் கதையில் தன் தாயை கவனித்து கொள்ள முடியாத மகன் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு போவதையும்  முதியோர் இல்லத்தில் அவரின்அனுபவத்தையும கூறும் பொழுது கண்ணீர் வருகிறது.ந.பிச்சமூர்த்தியின் கவலை மாடு கதையில்வரும் கிழவருக்கு கோபத்தை காட்டி கொள்ள ஒரு இடமும் ஆட்களும் இருக்கும் போது கோவிலில் வாசிக்கும் இசை கலைஞர்களை சிறிய மின்சார இயந்திரம் வெளியேற்றி அவர்கள் கோபத்தை யாரிடமும் காட்டமுடியாமல் அல்லல்பட்டு சிறுசிறு வேலைகள் செய்வதை சொல்லும் போது நமக்கு கோபமாக வருகிறது.வழக்கமாக கட்டுரைகளயும் கதைகளயும் படிக்கும் எனக்கு கதாவிலாசம்  வித்தியாசமான அனுபவங்களை கொடுத்தது.
cats_col

ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி

தமிழின் முன்னோடி எழுத்தாளரான சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற இலக்கியப் படைப்பான ஒரு புளிய மரத்தின் கதை புதினத்தை வெகு நாட்களுக்கு பிறகு அச்சுப்புத்தகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.இது ஒரு புளிய மரத்தை மையமாக வைத்து பல கதாபாத்திரங்களை வைத்து எழுதப்பட்ட புதினம். இதில் ஒரு புளிய மரத்தை மௌன சாட்சியாக வைத்து சுதந்திரப் போராட்ட காலத்தில் நாஞ்சில் நாட்டில் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை நம் கண் முன் நடக்கும் காட்சிகளாய் நிறுத்துகிறார் கதையாசிரியர்.பல கதாபாத்திரங்கள் மூலம் இலக்கிய நயம் குன்றாமல், யதார்த்த வாழ்வை, மனித மனத்தின் பல பரிமாணங்களை வட்டார மொழி வழக்கில் விறுவிறுப்பாகக் கொண்டு  சென்று புளிய மரத்தின் கிளைகளாய் விரிகிறது கதை.ஆசிரியரின் பரந்த அனுபவ அறிவையும், அதில் இழையோடும் நையாண்டியையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. இலக்கியமும் வாழ்வியலும் இணைந்து இனிய எளிய நடையில் உள்ள இந்த செவ்வியல் புதினம் நாம் அனைவரும் படித்துக் கொண்டாட வேண்டிய ஒன்று.இது ஆங்கிலம், ஹீப்ரு உட்பட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பெருமை உடையது. 
cats_col

கல்மலர் - சுனில் கிருஷ்ணன்

காந்தி உருவாகி வந்த சித்திரத்தை நமக்கு அளிக்க காந்தியின் புத்தகங்களான சத்திய சோதனை, இந்திய சுயராஜ்ஜியம் மற்றும்  தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் ஆகிய மூன்று நூல்களை அறிமுகப்படுத்துகிறது கல்மலர் என்னும் இக்கட்டுரைத் தொகுப்பு.காந்தியில் இருந்து காந்தியம் உருவாகும் தருணங்களை கோர்த்து அளிக்க முயல்வதாக சுனில் கிருஷ்ணன் குறிபிடுகிறார். காந்தியின் பரிட்சார்த்த முறைகளினால் தனது எண்ணங்கள்  பரிணாம வளர்ச்சியடைவதை, உண்மை தன்மையை கண்டடைவதை , தகுந்த உதாரணங்களுடன் பல்வேறு ஒப்பீடுகளை முன் வைத்துக்கொண்டே செல்கிறது இக்கட்டுரை தொகுப்பு. இக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்களும், காந்தி குறித்த ஆய்வுகளும் , ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. சத்தியாகிரகத்திற்கான தக்க விளக்கங்களை பல்வேறு நிகழ்வுகளினுடே , அதை மக்களின் மனங்களில் விதைக்க அவர் தேர்ந்தெடுத்த வழிமுறைகளையும் , சிக்கல்களை புரியவைப்பதில் அவருடைய மெனக்கெடல்களையும்  சில எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளங்க வைக்கிறது. சத்தியாகிரகம் மானுடத்திற்கான காந்தியின் கோடை என்பது சத்தியமான வார்த்தை என்பதை இக்கட்டுரை நமக்கு சொல்கிறது.சத்திய சோதனையை  பற்றி குறிப்பிடும் பொழுது, இந்நூல் அபார புனைவுத் தருனங்களால் ஆனது என்று குறிப்பிடுகிறார். அந்நூல் நமக்கு ஒரு புனைவப் பிம்பத்தை அளிக்கும், ஆனால் சத்தியமான நிகழ்வுகளால் தொகுக்கப்பட்டுள்ள செவ்வியல் படைப்பு என குறிப்பிடுகிறார் . சத்திய சோதனையை சிறிது வாசித்தவன் என்பதால், சு.கி னின் கூற்றை முழுமையாக உணர முடிகிறது. மற்ற நூல்களைப் பற்றிய அறிமுகம் , நிகழ்வுகளின் தொகுப்பு என ஒரு ஆனந்தமான வாசிப்பாகவே இந்நூல் எனக்கு அமைந்தது. காந்தியின் வாழ்க்கை நவீன வாழ்வின் விமர்சனம், அவரை முழுமையாக அறிந்து ஒரு கட்டுக்குள் அடைத்து புரிந்து கொள்ள முடியாது, ஆனால் இப்புத்தகங்களை படிக்க படிக்க நம்முள் வளர்ந்து நம்மை விரித்து எடுத்துச் செல்வார். என்னளவில் காந்தியை அனுக இது ஒரு முக்கியமான அறிமுக நூலாக பார்க்கிறேன்.
cats_col

நவீன இலக்கிய இரவு - 15 மார்ச் 2021

ஒருங்கிணைப்பாளர் - மதுநிகாநவீன இலக்கிய இரவு திருக்குறளோடு ஆரம்பமானது. திரு. ராம்குமார் அவர்கள் சினம் காக்கும் முறையைப் பற்றி அழகான விளக்கத்தோடு திருக்குறளை கூறினார்.திரு.மூர்த்தி அவர்கள் சென்னை புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகிய புத்தகங்களின் பட்டியலை பகிர்ந்தார்.திருமதி. முல்லை அவர்கள் மைதானத்து மரங்கள் என்ற கந்தர்வன் அவர்கள் எழுதிய சிறுகதையைப் பகிர்ந்தார். அனைவரும் தங்களுக்கும் மரங்களுக்குமான உறவை அந்த கதையை அடுத்து பகிர்ந்து கொண்டனர்.திருமதி. மேனகப்புன்னகை, பூவுக்கும் கீழே என்ற கதையைப் பகிர்ந்தார். கந்தர்வன் அவர்கள் செடிகளுக்கும் மனிதருக்குமான உறவை அழகாக எழுதியதைப் பற்றி பேசப்பட்டது.திருமதி. மதுநிகா , எழுத்தாளர் கந்தர்வன் பற்றிய அறிமுகமும் அவரது கவிதை மற்றும் சில தகவல்களையும் பகிர்ந்தார்.(link)
cats_col

நவீன இலக்கிய இரவு - 14 மார்ச் 2022

நவீன இலக்கிய இரவு   - 14 மார்ச் 2022மார்ச்14, 2022ஒருங்கிணைப்பாளர்: திருமதி: மதுநிகா சுரேஷ்இன்றைய நவீன இலக்கிய இரவில் திருமதி. மதுநிகா ஒரு திருக்குறளோடு ஆரம்பித்தார்.‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை’ எனத் தொடங்கும் அந்த குறலில் உள்ள பொருள் மயக்கத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அளித்த விளக்கம்  பற்றி கலந்துரையாடல் நிகழ்ந்தது.அதனை தொடர்ந்து திரு. சங்கர் அவர்கள் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய டைரி என்ற சிறுகதையை வாசித்தார். நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் பற்றியும் விளக்கம் அளித்தார்.திரு. தங்கவேல் அவர்கள் அந்த கதையின் கட்டமைப்பு பற்றி பகிர்ந்தார்.சர்வஞான நோக்குநிலை மற்றும் நினைவோடை நோக்குநிலை பற்றி விளக்கம் அளித்தார்.திருமதி. பிரவீணா அவர்கள் திரு.ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதிய நாகா என்ற புத்தக அறிமுகம் செய்தார். சாரணர் இயக்கம் பற்றி இந்த புத்தகத்தில் இடம்பெற்ற சில தகவல்களை பகிர்ந்ததும் அதனை சார்ந்த தத்தம் நினைவுகளை அனைவரும் பகிர்ந்தனர்.சிறுவர்களுக்கு இந்த புத்தகத்தை அறிமுகம் செய்ய அனைவருக்கும் உந்துதலை ஏற்படுத்தும் வகையில் மிக தெளிவான ஒரு புத்தக அறிமுகத்தை செய்தார்.நவீன இலக்கிய இரவின் கலந்துரையாடல் நாளுக்கு நாள் மிக ஆழமான எழுத்து உத்திகள் மற்றும் படைப்புகள் பற்றிய வேறு வேறு கோணங்கள் என்று நிகழ்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது(link)
cats_col

சங்க இலக்கிய இரவு: 07-March-2022

சங்க இலக்கிய இரவு: 3.7.22“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.” என்ற 1151 குறளைபிறிவாற்றமை அதிகாரத்திலிருந்து திரு. ஜெயக்குமார் அவர்கள் பகிர்ந்தது சிறப்பு.திருமதி. பிரவீணா அவர்கள் விநாயகர் நான் மணி மாலை பற்றிய அறிமுகத்தைப் பகிர்ந்து விட்டு அதிலிருந்து போற்றிப் பாடல் உட்பட சில பாடல்களைப் பற்றிய விளக்கமும், தவம் என்றால் என்ன விளக்கத்தையும் சிறப்பாக விளக்கினார். கவிதை என்பது காளி கொடுத்த வரம் என்று பல புலவர்கள் சொல்லி இருப்பதாகவும் பகிர்ந்தார்.திரு. சுரேஷ் அவர்கள் கம்பராமாயணத்தில் இருந்து, ‘ யாழையுடைய  பாணர்கள்;  தேம்பிழி  நறவம்  மாந்தி- இனிமையாய்’ என்ற பாடலும், பாணர் பாடல் பாடி மகளிரின் துயில் எழுப்பும் பாடலான ‘ தெள்விளிச்   சிறியாழ்ப்பாணர்- தெளிந்த இசை  கொண்ட சிறிய’ ஆகிய இரண்டு பாடல்களை வர்ணனையுடன் பகிர்ந்தார்.பாடலை ஒட்டி உழவர்கள் குறித்தான லதா அம்மா பகிர்ந்த கருத்துப் பரிமாற்றம் சிறப்பு.புறநானூறு பாடல் 9 நெட்டியார் பாடிய ‘ ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்’, பகிர்ந்தார். பாடல் ஆசிரியர் குறிப்புடன், இந்தப் பாடல் பாண்டிய மன்னனுக்காகப் பாடிய பாடல் என்ற விளக்கத்திடம் பாடலின் கருத்தைச் செறிவுடன் விளக்கினார். கம்பராமாயணத்தில் இருந்து நரை முடி குறித்தான இரண்டு பாடல்களையும், ‘மயிர்’ என்ற வார்த்தை திருக்குறள், பெரியபுராணம், கம்பராமாயணம் என்ற இடங்களில் எப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும், அந்த நல்ல வார்த்தையா? கெட்ட வார்த்தையா?, எப்படி புழக்கத்தில் பயன்படுத்தி இருக்கிறது என்பதையும் விளக்கினார். அதனை ஒட்டி கருத்துகள் பகிரப்பட்டன.நிகழ்ச்சி தொகுப்பும், ஒலிப்பதிவும் ப்ரியா பாஸ்கரன்.மற்றொரு சிறப்பான சங்க இலக்கிய இரவாக அமைந்தது. ப்ரியா பாஸ்கரன்.(link)
cats_col

நவீன இலக்கிய இரவு - 28 பிப்ரவரி 2022

இன்று பிப்ரவரி 28 2022,நவீன இலக்கிய இரவுஒருங்கிணைப்பு: திரு சங்கர் இன்றைய இலக்கிய இரவு கற்க கசடற திருக்குறளோடு திரு குமரகுரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்து திரு சுரேஷ் அவர்கள் தான் எழுதிய கவிதையையும் மற்றும் பிரமிள் அவர்களின் ரசவாதம் கவிதையையும் பகிர்ந்தார்.அதைத்தொடர்ந்து பிரமிளும், நகுலனும் எந்த அளவு திரும்ப திரும்ப படித்து ஆழமாக புரிந்து கொள்ளவேண்டிய கவிஞர்கள் என்று கலந்துரையாடப்பட்டதுஅடுத்து திருமதி மதுனிகா அவர்கள் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் தன்மீட்சி புத்தகத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். இலக்கியத்தில் எந்த அளவு ஈடுபாடு காட்டவேண்டும், எவ்வளவு முயற்சிகள் எடுத்தால் சிறப்பான படைப்பாக இருக்கும் என்று கலந்துரையாடினோம்அடுத்து திரு சங்கர் அவர்கள் எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன் அவர்கள் எழுதிய நெரு நள் உளளொருத்தி” என்கிற சிறுகதையை பகிர்ந்தார். அதில் குழந்தையின்மையின் நடப்பு வாழ்க்கையையும், விவசாய பிண்ணணி கொண்ட குடும்பத்தின் நடப்புக்களையும் அழகான புனைவாக எழுத்தாளர் வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்தும் ஆர்வமான உரையாடல் நிகழ்ந்தது. கவிதைகள், கதை என சிறப்பான நவீன இலக்கிய இரவாக முடிந்தது.(link)
cats_col

சங்க இலக்கிய இரவு - 21 பிப்ரவரி 2022

சங்க இலக்கிய இரவு - 21 பிப்ரவரி  2022 இன்று பிப்ரவரி 21, 2022 ஆம் நாள் திங்கட்கிழமை, சங்க இலக்கிய இரவு. ஒருங்கிணைப்பாளர்  பிரவீணா இராமரத்தினம். செங்கோன்மை அதிகாரத்தில் கவிஞர்.தீபா பகிர்ந்த  திருக்குறள்  நல்ல கலந்துரையாடலுக்கு வித்திட்டு முத்தான துவக்கத்தைத்  தந்தது.திரு. சுரேஷ் அவர்கள், கம்பராமாயணத்தின்  நாட்டுப் படலத்தை சேர்ந்த  நீரிடை உறங்கும் சங்கு பாடல் பகிரந்தார். திரு துஞ்சுவதை ஏன் பல புலவர்களும் விரும்பி இருக்கிறார்கள் என்று கலந்துரையாடல் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து தார், மாலை குறித்த கருத்துகள் பகிர்ந்து கொள்ளப் பட்டன.தொடர்ந்து திரு. இராம்குமார் அவர்கள், நிலையாமை தொடர்புடைய திருக்குறள் மற்றும் நாலடியார் பாடலையும் ஒப்பிட்டு  சிறப்பாக பகிர்ந்து கொண்டார். செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்பவற்றில் இளமை, யாக்கை நிலையாமை குறித்து பேசப்பட்டது. பிறகு, திருமிகு.லதா அவர்கள்  கம்பராமயணம்  அரங்கேற்றப் பட்டது எப்படி என்பதை  கதை  வடிவில் சுவையாகப் பகிர்ந்துகொண்டார். அதன் கடவுள் வாழ்த்துப் பாடல் கம்பராமாயணத்தின் இலக்கண விதிகளை பூர்த்தி செய்ததாகக் கூறிய  செய்தி அனைவரையும் ஈர்த்தது. மாலை பற்றிய சொற்கள் பலவற்றை திரு. சுரேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்டார். பாரதியும் பாரதிக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த இலக்கியங்களை சங்க இலக்கிய இரவிலும், பாரதி மற்றும் அவருக்கு பிற்பட்ட காலத்தை நவீன இலக்கிய இரவிலும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பாரதி எல்லா காலங்களுக்கும் பொதுவாகக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப் பட்டது.அடுத்த வாரம் நவீன இலக்கிய இரவிற்கு ஒரு முன்னோட்டமாக, அம்பை அவர்களின் அடவி கதை குறித்தும் பேசப்பட்டது.நீலமாலை என்ற பெயரை நீங்கள் கேட்டதுண்டா? அவர் குறித்த சுவையான தகவல்களும் சங்கர் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.வழக்கம் போல ஒரு இனிமையான சந்திப்பாக இந்த இலக்கிய இரவும் அமைந்தது.(link)
cats_col

நவீன இலக்கிய இரவு 31-ஜனவரி -2022

இன்று ஜனவரி 31 2022 நவீன இலக்கிய இரவுஒருங்கிணைப்பு: மேனகப்புன்னகைஇன்றைய இலக்கிய இரவை மேனகா அவர்கள் திருக்குறளோடு ஆரம்பித்தார். அதன்பின் திரு சுரேஷ் அவர்கள் அவரே எழுதிய முரட்டுக்காளை என்கிற கதையை சுவைபட பகிர்ந்தார். அக்கதை எல்லோரையும் நெகிழ வைத்தது. ஒரு கிராமத்துக்கே தங்களை அழைத்து செல்வது போல் இருந்ததாக கருத்து தெரிவித்தார்கள்அவரின் வட்டார வழக்கு சொல்லாடகள் மிகவும் அருமையாக இருந்தன. அடுத்து திருமதி மதுநிகா அவர்கள் எழுத்தாளர் ஜெயகாந்தனின் “ ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்” எங்கிற நாவலை பற்றிய புத்தக விமர்சனம் செய்தார்,அதில் ஒவ்வொரு மனிதனின் மேன்மையான குணங்களை அழகாக விளக்கினார். திரு சங்கர் அவர்கள் ஹென்றியின் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்து பேசினார். திருமதி மதுநிகா அவர்கள் ஜெயகாந்தன் கதை எழுதும் பாணியையும் அழகாகவிளக்கினார்.அவரின் பல்வேறு படைப்புகள் அலசப்பட்டு இனிமையாக முடிந்தது இந்த இலக்கிய இரவு.(link)
cats_col

சங்க இலக்கிய இரவு - 24 ஜனவரி 2022.

சங்க இலக்கிய இரவு  - 24 ஜனவரி  2022. சங்க இலக்கியம்: 1/24/22நிகழ்வினை முத்தான குறள் 753 உடன்  தொடங்கி வைத்தார் திரு. இராம்குமார் இராமலிங்கம், அதற்கு விளக்கமும் சிறப்பாகக் கொடுத்தார்.பரி, அதாவது குதிரைப் போலக் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் பரிபாடலிருந்து வரிகள் 2-17 பகிர்ந்தார் திருமதி. லதா குமார். அந்த வரிகள் அறிவியல் மற்றும் கணித பூர்வமாக உள்ளன என்பதற்கு அளித்த விளக்கம் பல கலந்துரையாடலுக்கு வழி வகுத்தது.காதல் இல்லாமல் பிரபஞ்சம் இயக்குவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.. அதற்கு உதாரணமாகச் சங்க இலக்கியம் குறுந்தொகைப் பாடல் 13, குறிஞ்சித் திணையில் அமைந்த கபிலர் பாடிய பாடலை அழகுற எடுத்துரைத்தார் திருமதி. ப்ரியா பாஸ்கரன்.மார்கழி மாதம் என்றால் தான் திருப்பாவை பாடவேண்டுமா..? தையிலும் பாடலாமே என்றுவாரணம் ஆயிரம் சூழ.. கருப்பூரம் நாறுமோ.. இரண்டு பாடல்களை அழகுற விளக்கினார் திரு. சுரேஷ் பழனியாண்டி.எக்காலத்திலும் பாட்டன் பாரதியின் பாடல்கள் பொருந்தும். அவற்றிலிருந்து பாடலின் ஆரம்பம் இல்லாத சுவையான பாடலொன்றை வாசித்து, அது எந்த சூழ் நிலையில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற அறியத் தகவல்களைப் பகிர்ந்தார் திருமதி. பிரவீணா இராமரத்தினம்.திரு. சேதுராமன் நாராயணசுவாமி அவர்கள் இடையிடையே பரிபாடல், பாரதியார் பாடல்களுக்கான கூடுதல் தகவல்களை வழங்கினார்.நிகழ்ச்சியைத் திருமதி. பிரியா பாஸ்கரன் ஒருங்கிணைக்க, திரு. இராமலிங்கம் ஒலிப்பதிவு செய்தார்.ப்ரியா பாஸ்கரன்(link)
cats_col

நவீன இலக்கிய இரவு - 07 ஜனவரி 2020

நவீன இலக்கிய இரவு07 ஜனவரி 2020இலதாகுமார் (ஒருங்கிணைப்பாளர்)(link)
cats_col

நவீன இலக்கிய இரவு ஜனவரி 3 2022.

நவீன இலக்கிய இரவு இரவு ஜனவரி 3 2022.ஒருங்கிணைப்பாளர் திருமதி மதுநிகா2022 ஆம் ஆண்டின் முதல் இலக்கிய இரவு இன்று நடைப்பெற்றது. எழுத்தாளர் வளன் அவர்களும் கலந்துகொண்டார்.தீபா அவர்கள் திருக்குறளோடு நிகழ்வினைத்தொடங்கினார்.  அதன்பின் அவரே   நேசமணியின்          தத்துவங்கள் என்ற புத்தகத்தைப் பகிர்ந்தார், நடிகர் வடிவேலு அவர்களின் நகைச்சுவை எவ்வளவு ஆழமான கருத்துக்கள் உடையவை என்ற கலந்துரையாடல் நிகழ்ந்தது.எழுத்தாளர் வளன், திருமூர்த்தி, ஆனந்த் மற்றும் சுரேஷ் அது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதை தொடர்ந்து ரூமியின் தாகம் கொண்ட மீனொன்று என்ற கவிதை தொகுப்பைப் பற்றி திருமதி. மதுநிகா பகர்ந்தார்.எழுத்தாளர் வளன் அவர்கள் ரூமியின் மூலக்கவிதைகள் பாரசீக மொழியில் இருப்பதால் ஆங்கில மொழி பெயர்ப்பு இன்னும் கவிதையை நன்றாக புரிந்து கொள்ள உதவும் என்றும் விளக்கினார்(link)