தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
blog

கதாவிலாசம் - எஸ். ராமகிருஷ்ணன்

கதாவிலாசம் தமிழின் 50 எழுத்தாளர்களின் விலாசத்தையும் அவர்களின் கதைகளையும் அறிமுகப்படுத்துகிறது.  ஒவ்வொரு எழுத்தாளர் பற்றிய சிறு குறிப்பும் இருக்கின்றது. தனக்கு நேர்ந்த அனுபவங்களோடு எழுத்தாளர்களின் கதைகளை இணைத்து ஒப்புமை படுத்தி இந்த நூலை ஆசிரியர் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு. வாசிக்கும் பொழுது நம்  இளமை காலத்து அனுபவங்களை நம் கண் முன்னே நிழலாட செய்கிறது, இந்த சமூகத்தின் மீது கோபம் கொள்ள செய்கிறது, எளிய மனிதர்களை நேசிக்க செய்கிறது. ஆசிரியரின் ஒவ்வொரு அனுபவமும் நம்முள்  எதையோ கடத்தி செல்கிறது. அவற்றுள் சில:

வண்ணநிலவனின் எஸ்தர் கதையை சொல்லும்போது  ஒவ்வொருவரின் சொந்த ஊரும்  கண்ணுக்கு தெரியாத முத்திரைகளை நம்மீது குத்தி அதன் நினைவுகளோடு எப்படி வாழ்கிறோம் என்கிற ஏக்கத்தை கொடுக்கிறார்.

கரிச்சான் குஞ்சுவின் ரத்த சுவை  கதையோடு சொந்த வீடு கட்டுவதற்காக ஒருவன் எவ்வளவு அவமானங்களையும் கடன் தொல்லையையும் அனுபவிக்கிறான் என்று சொல்லும் போது மனது கணமாகிறது.

மா.அரங்கநாதன் ஏடு தொடங்கல் கதையின் மூலம் முதல் முதலாக எழுத்து பழக இருந்த பண்பாட்டை மறந்ததை போல நமது  பள்ளிகளில் மணி அடிக்க பயன்படுத்திய இரும்பு தண்டவாளத்தை நினைவு கூறுவது அழகு.

தமயந்தியின் அனல்மின் நிலையங்கள் கதையில் தன் தாயை கவனித்து கொள்ள முடியாத மகன் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு போவதையும்  முதியோர் இல்லத்தில் அவரின்அனுபவத்தையும கூறும் பொழுது கண்ணீர் வருகிறது.

ந.பிச்சமூர்த்தியின் கவலை மாடு கதையில்வரும் கிழவருக்கு கோபத்தை காட்டி கொள்ள ஒரு இடமும் ஆட்களும் இருக்கும் போது கோவிலில் வாசிக்கும் இசை கலைஞர்களை சிறிய மின்சார இயந்திரம் வெளியேற்றி அவர்கள் கோபத்தை யாரிடமும் காட்டமுடியாமல் அல்லல்பட்டு சிறுசிறு வேலைகள் செய்வதை சொல்லும் போது நமக்கு கோபமாக வருகிறது.

வழக்கமாக கட்டுரைகளயும் கதைகளயும் படிக்கும் எனக்கு கதாவிலாசம்  வித்தியாசமான அனுபவங்களை கொடுத்தது.

  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Trying to access array offset on value of type null

    Filename: views/view_details.php

    Line Number: 573

    Backtrace:

    File: /home2/tamilarv/public_html/tag/application/views/view_details.php
    Line: 573
    Function: _error_handler

    File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Details.php
    Line: 106
    Function: view

    File: /home2/tamilarv/public_html/tag/index.php
    Line: 319
    Function: require_once

id="btn"/>
Author

சந்தானலெட்சுமி

Author

Ilakkiyairavu18@gmail.com

Email

சந்தானலெட்சுமி

FEED BACK

No Feedback Arrived Yet! Be the First one

WRITE A COMMENT