தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
blog

சங்க இலக்கிய இரவு - 31 மார்ச் 2022

சங்க இலக்கிய இரவு - 31 மார்ச் 2022

இன்றைய சங்கத் தமிழ் நிகழ்ச்சி நிரல் ( 3/21/2022 )

ஒருங்கிணைப்பாளர்:
 திரு. ராம் குமார்

ஒலிப்பதிவு:
திரு. ராம் குமார் 
 
இன்றைய நிகழ்வு: 

 - திரு. ஜெயகுமார் அவர்கள் பொருட்பாலில் உள்ள வினைசெயல்வகை என்ற அதிகாரத்திலிருந்து ஒரு  குறளை பகிர்ந்து கொண்டு, மிக அருமையான விளக்கமும் தந்தார். 

- திரு. பாலாஜி அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு, கம்பராமாயணம்  நாட்டுப் படலத்திலிருந்து  
மாந்தர் சிறப்பைக் கூறும் 67 வது பாடல் மற்றும் பல வகை புகைகளைக் கொண்டு நாட்டின் வளத்தைக் கூறும் 41வது பாடலையும் பகிர்ந்து, அதை மிக விரிவாகவும், சுவைபடவும் கூறினார்.

- திருமதி.ப்ரியா அவர்கள் குருந்தொகையில் கபிலர் பாடிய 288 வது பாடலைக் கூறி துன்பதிலும் இன்பம் காணும் தலைவியை நம் கண் முன் நிறுத்தினார். மேலும் கபிலரின் சிறப்பைக் கூறும் 
புறநானூற்று பாடலையும் (126) சுருக்கமாகப் பகிர்ந்தார்.

- திருமதி. லதா அவர்கள் மார்ச் 21 - உலக கவிதை தினத்தை முன்னிட்டு, சங்க கால புலவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது திறமை பற்றி நயம்பட எடுத்துக் கூறும் புறநானூற்று பாடலைக் (47) கதை வடிவில் சொன்னார்.  

- திரு. ராம் குமார் அவர்கள் சிலப்பதிகாரத்தில் வரும் கொலைக்களக் காதையில் உள்ள 'வினைவிளை
... கொணர்க ஈங்கெனக்' (148-153) என்ற பாடல் வரிகளையும், வினையின் விளைவை பற்றியும் விளக்கமாக கூறினார்.

இதைத் தொடர்ந்து மடக்கு அணி பற்றிய கலகலப்பான கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி மிக இனிதாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் பங்கு கொண்டு இதைச் சிறப்பான ஒரு இரவாக மாற்றியவர்களுக்கும், இதைக் கேட்கும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

எழுத்தாக்கம் :
திருமதி. லதா குமார்.





id="btn"/>
Author

இராம்குமார் இராமலிங்கம்

Author

ramkumar17@hotmail.com

Email

இராம்குமார் இராமலிங்கம்

FEED BACK

No Feedback Arrived Yet! Be the First one

WRITE A COMMENT