தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
category

சங்க இலக்கிய இரவு: 16 மே 2022.


சங்க இலக்கிய இரவு: 16 மே 2022.

1057 குறளை அறிவியலுடனும், தனது சொந்த அனுபவத்துடனும் சேர்த்து மிக நேர்த்தியாக விளக்கம் அளித்தார், திரு. செங்குட்டுவன்.

புறநானூறு பாடல் 327 வை திருமதி. லதா வெகு சுவையுடன் பகிர்ந்தார். அதனை ஒட்டிய கலந்துரையாடல் சிறப்பு.

“புலமிக் கவரைப் புலமை தெரிதல்” பாடல் 5ஐ பழமொழி நானூற்றிலிருந்து பாடலைப் பகிர்ந்து, அதற்கு ஒப்பாக கம்பன் கையாண்ட பாடலையும் சேர்ந்து பகிர்ந்தார் திரு. இராம். 

கம்பராமாயணம் அகலிகை படலத்திலிருந்து 467 பாடலையும், தமிழ் என்று எப்படிப் பெயர் வந்தது என்றும் பகிர்ந்தார் திரு. பாலாஜி

நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் 
சேத்திரத் திருவெண்பாவிலிருந்து பாடல்களை இணைத்து அதற்கு விளக்கம் அளித்தார் திருமதி. பிரியா. 

சுவையான உரையாடல்களுடன் 
சிறப்பான கதம்ப இலக்கிய இரவாக அமைந்தது இன்றைய சங்க இலக்கிய  இரவு.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஒலிப் பதிவு செய்தார் திருமதி. பிரியா பாஸ்கரன்.


(link)
READ MORE
  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Trying to access array offset on value of type null

    Filename: views/category.php

    Line Number: 297

    Backtrace:

    File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
    Line: 297
    Function: _error_handler

    File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
    Line: 49
    Function: view

    File: /home2/tamilarv/public_html/tag/index.php
    Line: 319
    Function: require_once

id="btn"/>0
  • 0
  • category

    சங்க இலக்கிய இரவு - 04 ஏப்ரல் 2021

    இன்றைய சங்கத் தமிழ் நிகழ்ச்சி நிரல் (4/4/2022)

    ஒருங்கிணைப்பாளர்:
    திருமதி.லதா குமார்

    ஒலிப்பதிவு:
    திரு. ராம்குமார் 

    திரு. ராம்குமார் அவர்கள் திருக்குறளில் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ள குறள் 972 யைப் பகிர்ந்தார்.​  

    திரு. பாலாஜி அவர்கள் கம்பராமாயணம்/ நாட்டுப் படலத்திலிருந்து மக்களது சிறப்பைக் கூறும்  84 வது பாடலையும், நாட்டின் வளத்தைக் கூறும் 86வது பாடலையும் பகிர்ந்து அதை மிக விரிவாகவும், சுவைபடவும் கூறினார். 

    திருமதி ப்ரியா அவர்கள் கம்பராமாயணம்/ யுத்த காண்டம்/ வீடணன் அடைக்கலப் படலதிலிருந்தும், அயோத்தியா காண்டம் / கங்கைப் படலத்திலிருந்தும் இரண்டு பாடல்களை கூறி அறிவுரையின் முக்கியத்துவத்தையும், ஒரு உவமைக்கு பல உவமைகள் கூறும் ஒரு அரிய  பாடலையும் விளக்கத்துடன் பகிர்ந்தார். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் நடுநிலைமை அதிகாரத்தில் உள்ள 113 வது குறளையும் சுருக்கமாகப் பகிர்ந்தார். 

    திருமதி லதா அவர்கள் சங்க கால தமிழகத்தின் எல்லைகளைப் பற்றிக் கூறும் புறநானூற்று பாடல்களான 6 & 17 யும், சிலப்பதிகாரம்/ காடு காண் காதையில் வரும் 19-22 வரிகளையும் 
    சுருக்கமாகப் பகிர்ந்தார். 

    இறுதியாக 

    திரு. ராம்குமார் அவர்களின் சங்க இலக்கிய வினா - விடை நிகழ்ச்சியுடன் மிக இனிதாக நிறைவு பெற்றது.

    இந்நிகழ்வில் பங்கு கொண்டு இதைச் சிறப்பான ஒரு இரவாக மாற்றியவர்களுக்கும், இதைக் கேட்கும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

    எழுத்தாக்கம் :
    திருமதி.லதா குமார்.


    (link)


    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 297

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 297
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    சங்க இலக்கிய இரவு - 31 மார்ச் 2022

    சங்க இலக்கிய இரவு - 31 மார்ச் 2022

    இன்றைய சங்கத் தமிழ் நிகழ்ச்சி நிரல் ( 3/21/2022 )

    ஒருங்கிணைப்பாளர்:
     திரு. ராம் குமார்

    ஒலிப்பதிவு:
    திரு. ராம் குமார் 
     
    இன்றைய நிகழ்வு: 

     - திரு. ஜெயகுமார் அவர்கள் பொருட்பாலில் உள்ள வினைசெயல்வகை என்ற அதிகாரத்திலிருந்து ஒரு  குறளை பகிர்ந்து கொண்டு, மிக அருமையான விளக்கமும் தந்தார். 

    - திரு. பாலாஜி அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு, கம்பராமாயணம்  நாட்டுப் படலத்திலிருந்து  
    மாந்தர் சிறப்பைக் கூறும் 67 வது பாடல் மற்றும் பல வகை புகைகளைக் கொண்டு நாட்டின் வளத்தைக் கூறும் 41வது பாடலையும் பகிர்ந்து, அதை மிக விரிவாகவும், சுவைபடவும் கூறினார்.

    - திருமதி.ப்ரியா அவர்கள் குருந்தொகையில் கபிலர் பாடிய 288 வது பாடலைக் கூறி துன்பதிலும் இன்பம் காணும் தலைவியை நம் கண் முன் நிறுத்தினார். மேலும் கபிலரின் சிறப்பைக் கூறும் 
    புறநானூற்று பாடலையும் (126) சுருக்கமாகப் பகிர்ந்தார்.

    - திருமதி. லதா அவர்கள் மார்ச் 21 - உலக கவிதை தினத்தை முன்னிட்டு, சங்க கால புலவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது திறமை பற்றி நயம்பட எடுத்துக் கூறும் புறநானூற்று பாடலைக் (47) கதை வடிவில் சொன்னார்.  

    - திரு. ராம் குமார் அவர்கள் சிலப்பதிகாரத்தில் வரும் கொலைக்களக் காதையில் உள்ள 'வினைவிளை
    ... கொணர்க ஈங்கெனக்' (148-153) என்ற பாடல் வரிகளையும், வினையின் விளைவை பற்றியும் விளக்கமாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து மடக்கு அணி பற்றிய கலகலப்பான கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி மிக இனிதாக நிறைவு பெற்றது.

    இந்நிகழ்வில் பங்கு கொண்டு இதைச் சிறப்பான ஒரு இரவாக மாற்றியவர்களுக்கும், இதைக் கேட்கும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

    எழுத்தாக்கம் :
    திருமதி. லதா குமார்.


    (link)


    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    சங்க இலக்கிய இரவு - 21 பிப்ரவரி 2022

    சங்க இலக்கிய இரவு - 21 பிப்ரவரி  2022 

    இன்று பிப்ரவரி 21, 2022 ஆம் நாள் திங்கட்கிழமை, சங்க இலக்கிய இரவு. 

    ஒருங்கிணைப்பாளர்  பிரவீணா இராமரத்தினம். 

    செங்கோன்மை அதிகாரத்தில் கவிஞர்.தீபா பகிர்ந்த  திருக்குறள்  நல்ல கலந்துரையாடலுக்கு வித்திட்டு முத்தான துவக்கத்தைத்  தந்தது.

    திரு. சுரேஷ் அவர்கள், கம்பராமாயணத்தின்  நாட்டுப் படலத்தை சேர்ந்த  நீரிடை உறங்கும் சங்கு பாடல் பகிரந்தார். திரு துஞ்சுவதை ஏன் பல புலவர்களும் விரும்பி இருக்கிறார்கள் என்று கலந்துரையாடல் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து தார், மாலை குறித்த கருத்துகள் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

    தொடர்ந்து திரு. இராம்குமார் அவர்கள், நிலையாமை தொடர்புடைய திருக்குறள் மற்றும் நாலடியார் பாடலையும் ஒப்பிட்டு  சிறப்பாக பகிர்ந்து கொண்டார். செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்பவற்றில் இளமை, யாக்கை நிலையாமை குறித்து பேசப்பட்டது. 

    பிறகு, திருமிகு.லதா அவர்கள்  கம்பராமயணம்  அரங்கேற்றப் பட்டது எப்படி என்பதை  கதை  வடிவில் சுவையாகப் பகிர்ந்துகொண்டார். அதன் கடவுள் வாழ்த்துப் பாடல் கம்பராமாயணத்தின் இலக்கண விதிகளை பூர்த்தி செய்ததாகக் கூறிய  செய்தி அனைவரையும் ஈர்த்தது. 

    மாலை பற்றிய சொற்கள் பலவற்றை திரு. சுரேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்டார். 

    பாரதியும் பாரதிக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த இலக்கியங்களை சங்க இலக்கிய இரவிலும், பாரதி மற்றும் அவருக்கு பிற்பட்ட காலத்தை நவீன இலக்கிய இரவிலும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பாரதி எல்லா காலங்களுக்கும் பொதுவாகக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப் பட்டது.

    அடுத்த வாரம் நவீன இலக்கிய இரவிற்கு ஒரு முன்னோட்டமாக, அம்பை அவர்களின் அடவி கதை குறித்தும் பேசப்பட்டது.

    நீலமாலை என்ற பெயரை நீங்கள் கேட்டதுண்டா? அவர் குறித்த சுவையான தகவல்களும் சங்கர் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.

    வழக்கம் போல ஒரு இனிமையான சந்திப்பாக இந்த இலக்கிய இரவும் அமைந்தது.


    (link)
    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    சங்க இலக்கிய இரவு: 07-March-2022

    சங்க இலக்கிய இரவு: 3.7.22

    “செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 
    வல்வரவு வாழ்வார்க் குரை.” என்ற 1151 குறளை
    பிறிவாற்றமை அதிகாரத்திலிருந்து திரு. ஜெயக்குமார் அவர்கள் பகிர்ந்தது சிறப்பு.

    திருமதி. பிரவீணா அவர்கள் விநாயகர் நான் மணி மாலை பற்றிய அறிமுகத்தைப் பகிர்ந்து விட்டு அதிலிருந்து போற்றிப் பாடல் உட்பட சில 
    பாடல்களைப் பற்றிய விளக்கமும், தவம் என்றால் என்ன விளக்கத்தையும் சிறப்பாக விளக்கினார். கவிதை என்பது காளி கொடுத்த வரம் என்று பல புலவர்கள் சொல்லி இருப்பதாகவும் பகிர்ந்தார்.

    திரு. சுரேஷ் அவர்கள் கம்பராமாயணத்தில் இருந்து, ‘ யாழையுடைய  பாணர்கள்;  தேம்பிழி  நறவம்  மாந்தி- இனிமையாய்’ என்ற பாடலும், பாணர் பாடல் பாடி மகளிரின் துயில் எழுப்பும் பாடலான ‘ தெள்விளிச்   சிறியாழ்ப்பாணர்- தெளிந்த இசை  கொண்ட சிறிய’ ஆகிய இரண்டு பாடல்களை வர்ணனையுடன் பகிர்ந்தார்.
    பாடலை ஒட்டி உழவர்கள் குறித்தான லதா அம்மா பகிர்ந்த கருத்துப் பரிமாற்றம் சிறப்பு.

    புறநானூறு பாடல் 9 நெட்டியார் பாடிய ‘ ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்’, பகிர்ந்தார். பாடல் ஆசிரியர் குறிப்புடன், இந்தப் பாடல் பாண்டிய மன்னனுக்காகப் பாடிய பாடல் என்ற விளக்கத்திடம் பாடலின் கருத்தைச் செறிவுடன் விளக்கினார். 

    கம்பராமாயணத்தில் இருந்து நரை முடி குறித்தான இரண்டு பாடல்களையும், ‘மயிர்’ என்ற வார்த்தை திருக்குறள், பெரியபுராணம், கம்பராமாயணம் என்ற இடங்களில் எப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும், அந்த நல்ல வார்த்தையா? கெட்ட வார்த்தையா?, எப்படி புழக்கத்தில் பயன்படுத்தி இருக்கிறது என்பதையும் விளக்கினார். அதனை ஒட்டி கருத்துகள் பகிரப்பட்டன.

    நிகழ்ச்சி தொகுப்பும், ஒலிப்பதிவும் ப்ரியா பாஸ்கரன்.

    மற்றொரு சிறப்பான சங்க இலக்கிய இரவாக அமைந்தது. 


    ப்ரியா பாஸ்கரன்.


    (link)
    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    சங்க இலக்கிய இரவு - 24 ஜனவரி 2022.

    சங்க இலக்கிய இரவு  - 24 ஜனவரி  2022. 

    சங்க இலக்கியம்: 1/24/22

    நிகழ்வினை முத்தான குறள் 753 உடன்  தொடங்கி வைத்தார் திரு. இராம்குமார் இராமலிங்கம், அதற்கு விளக்கமும் சிறப்பாகக் கொடுத்தார்.

    பரி, அதாவது குதிரைப் போலக் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் பரிபாடலிருந்து வரிகள் 2-17 பகிர்ந்தார் திருமதி. லதா குமார். அந்த வரிகள் அறிவியல் மற்றும் கணித பூர்வமாக உள்ளன என்பதற்கு அளித்த விளக்கம் பல கலந்துரையாடலுக்கு வழி வகுத்தது.

    காதல் இல்லாமல் பிரபஞ்சம் இயக்குவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.. அதற்கு உதாரணமாகச் சங்க இலக்கியம் குறுந்தொகைப் பாடல் 13, குறிஞ்சித் திணையில் அமைந்த கபிலர் பாடிய பாடலை அழகுற எடுத்துரைத்தார் திருமதி. ப்ரியா பாஸ்கரன்.

    மார்கழி மாதம் என்றால் தான் திருப்பாவை பாடவேண்டுமா..? தையிலும் பாடலாமே என்று
    வாரணம் ஆயிரம் சூழ.. கருப்பூரம் நாறுமோ.. இரண்டு பாடல்களை அழகுற விளக்கினார் திரு. சுரேஷ் பழனியாண்டி.

    எக்காலத்திலும் பாட்டன் பாரதியின் பாடல்கள் பொருந்தும். அவற்றிலிருந்து பாடலின் ஆரம்பம் இல்லாத சுவையான பாடலொன்றை வாசித்து, அது எந்த சூழ் நிலையில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற அறியத் தகவல்களைப் பகிர்ந்தார் திருமதி. பிரவீணா இராமரத்தினம்.

    திரு. சேதுராமன் நாராயணசுவாமி அவர்கள் இடையிடையே பரிபாடல், பாரதியார் பாடல்களுக்கான கூடுதல் தகவல்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியைத் திருமதி. பிரியா பாஸ்கரன் ஒருங்கிணைக்க, திரு. இராமலிங்கம் ஒலிப்பதிவு செய்தார்.

    ப்ரியா பாஸ்கரன்


    (link)
    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0