தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
blog

சங்க இலக்கிய இரவு: 07-March-2022

சங்க இலக்கிய இரவு: 3.7.22

“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 
வல்வரவு வாழ்வார்க் குரை.” என்ற 1151 குறளை
பிறிவாற்றமை அதிகாரத்திலிருந்து திரு. ஜெயக்குமார் அவர்கள் பகிர்ந்தது சிறப்பு.

திருமதி. பிரவீணா அவர்கள் விநாயகர் நான் மணி மாலை பற்றிய அறிமுகத்தைப் பகிர்ந்து விட்டு அதிலிருந்து போற்றிப் பாடல் உட்பட சில 
பாடல்களைப் பற்றிய விளக்கமும், தவம் என்றால் என்ன விளக்கத்தையும் சிறப்பாக விளக்கினார். கவிதை என்பது காளி கொடுத்த வரம் என்று பல புலவர்கள் சொல்லி இருப்பதாகவும் பகிர்ந்தார்.

திரு. சுரேஷ் அவர்கள் கம்பராமாயணத்தில் இருந்து, ‘ யாழையுடைய  பாணர்கள்;  தேம்பிழி  நறவம்  மாந்தி- இனிமையாய்’ என்ற பாடலும், பாணர் பாடல் பாடி மகளிரின் துயில் எழுப்பும் பாடலான ‘ தெள்விளிச்   சிறியாழ்ப்பாணர்- தெளிந்த இசை  கொண்ட சிறிய’ ஆகிய இரண்டு பாடல்களை வர்ணனையுடன் பகிர்ந்தார்.
பாடலை ஒட்டி உழவர்கள் குறித்தான லதா அம்மா பகிர்ந்த கருத்துப் பரிமாற்றம் சிறப்பு.

புறநானூறு பாடல் 9 நெட்டியார் பாடிய ‘ ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்’, பகிர்ந்தார். பாடல் ஆசிரியர் குறிப்புடன், இந்தப் பாடல் பாண்டிய மன்னனுக்காகப் பாடிய பாடல் என்ற விளக்கத்திடம் பாடலின் கருத்தைச் செறிவுடன் விளக்கினார். 

கம்பராமாயணத்தில் இருந்து நரை முடி குறித்தான இரண்டு பாடல்களையும், ‘மயிர்’ என்ற வார்த்தை திருக்குறள், பெரியபுராணம், கம்பராமாயணம் என்ற இடங்களில் எப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும், அந்த நல்ல வார்த்தையா? கெட்ட வார்த்தையா?, எப்படி புழக்கத்தில் பயன்படுத்தி இருக்கிறது என்பதையும் விளக்கினார். அதனை ஒட்டி கருத்துகள் பகிரப்பட்டன.

நிகழ்ச்சி தொகுப்பும், ஒலிப்பதிவும் ப்ரியா பாஸ்கரன்.

மற்றொரு சிறப்பான சங்க இலக்கிய இரவாக அமைந்தது. 


ப்ரியா பாஸ்கரன்.



id="btn"/>
Author

பத்மபிரியா பாஸ்கரன்

Author

Priya@baskarans.com

Email

வணக்கம். எனது பெயர் “பத்மபிரியா பாஸ்கரன்”. பிரியா என்று எல்லோராலும் அழைக்கப்படுவேன். கடந்த 20 வருடங்களாக அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கிறேன். நான் இங்கு Walgreens மருந்தகம் என்ற நிறுவனத்தில் மேலாளராகப் பணி செய்கிறேன். கவிதை, கதை, கட்டுரை, நிகழ்ச்சி விமர்சனங்கள் எழுதுவதில், கருத்தரங்கில் பங்கேற்பதில், தமிழ் இலக்கிய, கவிதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில், சங்க காலப் பாடல்களைக் கதை வடிவில் குழுவாக இணைந்து தொகுத்துச் சொல்வதில் மிகுந்த ஆர்வம். பிரியாவின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூவில் எனது எண்ணங்களைக் கவிதையாகப் பதிக்கிறேன். எனது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் கதம்பம், கொலுசு, தமிழ்ச்சாரல், வல்லினச்சிறகுகள், தமிழ்டாக்ஸ் இணையதளம், வளரி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. நண்பர்களுடன் மரபுக் கவிதைகளை கற்று, அதனைப் பிறருக்கு Zoom வாயிலாகப் பயிற்சி அளித்துள்ளேன். சேலம் தமிழ் இலக்கியப் பேரவையில் பாரதியார் விருது பெற்றுள்ளேன். தமிழால் வளர்வேன், தமிழ் போற்ற வாழ்வேன்!

FEED BACK

No Feedback Arrived Yet! Be the First one

WRITE A COMMENT