தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
blog

மேலே...உயரே...உச்சியிலே... - வெ.இறையன்பு I.A .S

"இந்த நூல் மனித சிந்தனைகள் எவ்வாறு மேம்பட வேண்டும் அதாவது ஒரே மாதிரி சிந்தனையிலிருந்து விடுபட்டு சற்றே மாறுபட்டு சிந்தித்தால் மட்டுமே நாம் அடுத்தக் கட்டத்திற்கு அல்லது உயரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதுதான் முதன்மைக் கருத்தாக இருக்கிறது. இப்படி வழக்கமான சிந்தனையிலிருந்து வேறுபட்டு சிந்திப்பதற்கு பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்(Out of box thinking) என்று பெயரிட்டு அதுகுறித்து பல கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். இப்படி மாறுபட்டு சிந்திக்கும் முறையை மேற்கு உலகம் கையிலெடுத்து பல சாதனைகளை படைப்பதற்கு முன்பே நாம் இங்கு சிந்தித்திருக்கிறோம் என்று பல சம்பவங்களை பட்டியலிட்டிருக்கிறார்.

நம் நாட்டில் உள்ள புராண, இதிகாச கதைகளில் வரும் கதைமாந்தர்கள் வழக்கமான சிந்தனையிலிருந்து விடுபட்டு சற்று வேறுபட்ட சிந்தனையால் எடுத்த முடிவுகளை பற்றி விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். உதாரணமாக 
- சுயம்வரம் தேடி நாடெல்லாம் சுற்றியும் எந்த வரணும் கிடைக்காத சாவித்திரி இறுதியில் சத்தியவானை தேர்ந்தெடுத்த பிறகு அவனும் இறந்துவிட எமனிடம் அவள் வரம் கேட்ட விதம் 
- யாசகன் ஒருவன் பகடையில் துரியோதனனை வீழ்த்தி குதிரையையும், 23  பசுக்களையும் வென்ற பிறகு இந்த விடயம் சகுனிக்கு தெரிந்து அந்த யாசகனை பகடைக்கு அழைத்த விதம், அதாவது 23 பசுக்களுக்கு பதிலாக 24  பசுக்களை அந்த யாசகன் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்ல அதற்கு அந்த வாசகன் மறுப்புத் தெரிவிக்க ஒரு பசு கர்ப்பமாக இருப்பதாக சொல்லி அவனை பகடைக்கு வரவழைத்து துரியோதனன் இழந்த அனைத்தையும் மீட்டது, அந்த வாசகன் கொடுத்த தகவலை வைத்தே தருமனை பகடைக்கு அழைத்த விதம் 
- பேராசிரியர் நுக்ளியட் எகிப்து பிரமிடுகளின் உயரத்தை அளந்து சொன்ன விதம் 
- உலக நாடுகள் விழிப்பியல் காட்சி பிழை(Optical illusion ) பற்றி அறிந்தாய்வதற்கு முன்பே நம் நாட்டில் உள்ள பல கோவில்களில்(தாராசுரம் , தாரமங்கலம் கோவில் கலைச்சிற்பங்கள்) கலைச்சிற்பங்கள் இருந்ததும் அவை செதுக்கப்பட்ட விதம் 
- பைபிளில் சாலமன் கருத்துக்கள் சொன்ன விதம் 

இப்படி எத்தனையோ சம்பவங்களை மேற்கோள் காட்டி அவையனைத்தும் வழக்கமான சிந்தனையிலிருந்து மாறுப்பட்ட சிந்தனைகள் தான் என்று எடுத்துரைக்கிறார்.இன்னும் எத்தனையோ கணிதப் புதிர்கள் , வரலாற்றுச் சம்பவங்கள் , அறிவியல் சான்றுகள் என்று மேற்கோள் காட்டி மாறுபட்ட சிந்தனைகளால் விளைந்த மாற்றத்தையும் விளக்குகிறார்.மொத்தத்தில் ஒரு மனிதன் ஒரு துறையில் தன் உயரத்தை அடைய வழக்கமான சிந்தனையிலிருந்து விடுபட்டு மாறுப்பட்ட சிந்தனையில் விடைக் காண வேண்டும். பழமையான சிந்தனையெனும் கூட்டுப்புழுவிலிருந்து புதிய சிந்தனையெனும் பட்டாம்பூச்சி சிறகடித்தால்  நம் உயரம் மாறும் என்பது இந்த நூலின் பொதுக்கருத்தாக இருக்கிறது.நன்றி."

  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Trying to access array offset on value of type null

    Filename: views/view_details.php

    Line Number: 573

    Backtrace:

    File: /home2/tamilarv/public_html/tag/application/views/view_details.php
    Line: 573
    Function: _error_handler

    File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Details.php
    Line: 106
    Function: view

    File: /home2/tamilarv/public_html/tag/index.php
    Line: 319
    Function: require_once

id="btn"/>
Author

சி. திருமலைஞானம்

Author

thiruma409@gmail.com

Email

சி. திருமலைஞானம்

FEED BACK

No Feedback Arrived Yet! Be the First one

WRITE A COMMENT