தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
blog

எது நிற்கும்? - கரிச்சான் குஞ்சு

 முன்னுரை :
"எது நிற்கும்?" புத்தகம் மொத்தம் 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.இந்த கதைகளை தொகுத்தவர் அரவிந்தன். அனைத்து கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. முக்கியமாக சமூக ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள், குடும்ப உறவுகளின் நிலவும் போலித்தனங்கள், சுயநலன்கள், மரபு வழிபட்ட பார்வை கண்ணோட்டத்துடன் இருக்கக்கூடிய கதைகள் இந்த சிறுகதை தொகுப்பில் உள்ளது.

 பகுப்பாய்வு :
இந்த சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் பல இருந்தாலும் இங்கு நான் ஒரு சில கதைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

- “ குசமேட்டுச் ஜோதி” - இந்த சிறுகதை மக்களிடம் நிலவும் சராசரிஆன்மீக தேடலை பயன்படுத்தி போலி ஆன்மீக குருமார்களை உருவாக்கி அதன் மூலம் மக்களின் லாபம் அடையும் மனிதர்களைப் பற்றிய கதை. சராசரி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் அவனிடம் விற்று விடலாம் அதில் ஆன்மீகம் மிகவும் சுலபம்.

- "காதம்பரி" - எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கதை காதம்பரி. இந்த கதை ஒரு எழுச்சி புலவன் அரசை எதிர்த்து பல பாடல்களை இயற்றுகிறான். பின்பு அரசு பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து எதிர்க்க முடியாமல் தன் நண்பர்கள் உடன் காட்டுக்கு தப்பி செல்கிறான்.

அங்கு காட்டில் வாழும் காதம்பரியை சந்திக்கிறான். அவர்கள் இருவரும் பிடித்து போய் கணவன் மனைவியாக மாறுகிறார்கள்.அவளுக்கு நாட்டு மனிதர்களைப் போல உடை உடுத்தி அவர்களின் வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை.

புலவனும் தன் மனைவி ஆசையை நிறைவேற்றலாம் என்று நாட்டுக்கு செல்ல கிளம்புகிறான். புத்த அரசன் ஆட்சியில் நாடு இருக்கிறது. தன்னால் இந்த அரசுடன் ஒன்றி வாழ முடியுமா என்று குழப்பத்துடன் நாட்டில் குடியேறுகிறான்.

காதம்பரியின் ஆசைக்கிணங்க தனது பல சுய கௌரவங்களை விட்டு நாட்டு மக்களுடன் ஒத்து போய் சாமானிய வாழ முடிவு எடுத்த தருணம். அவனுக்கு அரசனிடம் இருந்து அழைப்பு வருகிறது. அரசன் அவனை அரசவைப் புலவனாக பதவி கொடுக்கிறான். புலவனுக்கு அரசாங்க குடியிருப்பு கொடுக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை தான் காதாம்ரியின் ஆசை. தன் மனைவிக்காக தனக்கு ஏற்பில்லாதவற்றையும் சகித்துக் கொள்கிறான். ஒரு நாள் வீட்டில் புலவன் எழுதி எழுதி பார்த்து கவிதைகளை கிழித்து போடுவதை கவனித்த காதம்பரி என்னவாயிற்று என்று கேட்கிறாள். அரசனைப் புகழ்ந்து கவிதை
வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கிறார்கள் என்று காதாமரிடம் சொல்கிறான். கிளம்புங்கள் என்றால் காதம்பரி .எழுதிய கவிதைகளை எரிந்து விட்டு தன் கணவனை அழைத்துக் கொண்டு காட்டை நோக்கி செல்கிறாள்.
மறுபடியும் லட்சிய கவிஞனாக மாறுகிறான்.

 எழுத்து நடை:
கருச்சான் குஞ்சு அவர்கள் எழுத்து மிகவும் செம்மையான மொழி கட்டமைப்பு உடையது, தேவைப்படும் இடங்களில் மட்டுமே வட்டார மொழியை உபயோகப்படுத்தி மற்ற இடங்களில் அவருடைய மொழி ஆளுமை மூலம் கதை கட்டமைப்புக்கு தேவையான உரைநடை மொழியாக கதையை சொல்கிறார்.

வரலாற்று / கலாச்சார சூழல்:
கரிச்சான் குஞ்சு அவர்கள் கும்பகோணம் தஞ்சை வட்டாரங்களில் வாழ்ந்த ஒரு எழுத்தாளர் அவர் கதை மாந்தர்களும் அவர் கதைகளும் அந்த பகுதியை சுற்றியே அமைந்துள்ளன முக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள்/சூழ்நிலைகளை சார்ந்த கதைகள்.

முடிவுரை :
லட்சியவாதிகளின் வாழ்வியல் தருணங்கள், சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை, போலி சித்தாந்தம் ஆளுமைகளை கேலி செய்தும். சில தத்துவ விசாரணமுள்ள( “மானுடம் வென்றதம்மா”) சிறுகதைகளும் இதில் அடங்கும்.
இந்த தொகுப்பு எனக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் ஏற்படுத்தியது மற்றும் கருச்சான் குஞ்சு எழுத்துக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த தொகுப்பு எனக்கு உதவியது.

  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Trying to access array offset on value of type null

    Filename: views/view_details.php

    Line Number: 573

    Backtrace:

    File: /home2/tamilarv/public_html/tag/application/views/view_details.php
    Line: 573
    Function: _error_handler

    File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Details.php
    Line: 106
    Function: view

    File: /home2/tamilarv/public_html/tag/index.php
    Line: 319
    Function: require_once

id="btn"/>
Author

சின்னையா பாண்டியன்

Author

Ilakkiyairavu18@gmail.com

Email

சின்னையா பாண்டியன்

FEED BACK

No Feedback Arrived Yet! Be the First one

WRITE A COMMENT